ஐ.பி.எல் வரலாற்றின் ஜாம்பவான் அணியான ஆர்.சி.பி.யின் டாப் 8 குறைந்தபட்ச ஸ்கோர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற 36-வது லீக் போட்டியில் பெங்களூருவை தனது அதிரடியான பந்துவீச்சால் வெறும் 68 ரன்களுக்கு சுருட்டிய ஹைதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டு பிளேஸிஸ், விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என நட்சத்திர வீரர்கள் இருந்தபோதிலும் சீட்டுக்கட்டு போல விக்கெட்டுக்களை இழந்த பெங்களூர் ஐபிஎல் வரலாற்றில் தனது 2-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

RCB vs SRH

- Advertisement -

இந்த நிலைமையில் ஐபிஎல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட டாப் 8 குறைந்தபட்ச ஸ்கோர்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். இந்த டாப் 8 பட்டியலில் 4 இடங்களில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு இடம் பிடித்து ராஜாங்கம் நடத்துகிறது என்றே கூறலாம்.

8. ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த 2014 ஐபிஎல் தொடரில் அபுதாபியில் நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்ட பெங்களூரு முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணியின் பர்வின் தாம்பே மாயாஜால சுழலில் சிக்கி 15 ஓவரில் வெறும் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிக பட்சமாக விராட் கோலி 21 (25) ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் பர்வீன் தாம்பே 4 விக்கெட்டுகள் எடுத்து தனது அணியை வெற்றி பெறச் செய்தார்.

rcb

7. கடந்த 2019 ஐபிஎல் தொடர் நம்ம தமிழக தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. அதில் நடப்பு சாம்பியனான தோனியின் சென்னையை விராட் கோலியின் பெங்களூரு எதிர் கொண்டதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமாக முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு சென்னை பவுலர்களின் சுழலில் சிக்கி 17.1 ஓவரில் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுக்க சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

- Advertisement -

6. ஹைதெராபாத்துக்கு எதிராக இந்த வருடம் ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழக வீரர் நடராஜன் மற்றும் மேக்ரோ யான்சன் வேகத்தில் தாறுமாறாக உடைந்த பெங்களூரு 16.1 ஓவரில் வெறும் 68 ரன்களுக்கு சுருண்டு இந்த பட்டியலில் 6-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. நடராஜன் மற்றும் யான்சென் ஆகிய இருவருமே தலா 3 விக்கெட்டுகள் எடுத்து பெங்களூருவின் கதையை முடித்த நிலையில் ஹைதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Virat Kohli SRH Test

5. கடந்த 2008இல் நடந்த முதல் ஐபிஎல் தொடரில் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் சச்சின் தலைமையிலான மும்பையை கொல்கத்தா எதிர்கொண்டது. ஆனால் மும்பையின் சிறப்பான வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாத கங்குலி தலைமையிலான கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 15.2 ஓவர்களில் வெறும் 67 ரன்களுக்கு சுருண்டு இந்த பட்டியலில் 4-வது இடத்தைப் பிடிக்கிறது. மும்பை சார்பில் ஷான் பொல்லாக் 3 விக்கெட், ட்வயன் ப்ராவோ 2 விக்கெட் எடுக்க அதன்பின் 68 என்ற இலக்கை சனத் ஜெயசூர்யா மட்டுமே 48* (17) ரன்களை அதிரடியாக விளாசி வெறும் 5.3 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்திலான மும்பையின் வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

4. மொஹாலியில் கடந்த 2017 ஐபிஎல் தொடரின் 36-ஆவது போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொண்ட டெல்லி அந்த அணியின் அதிரடியான வேகப்பந்து வீச்சில் வெறும் 17.1 ஓவரில் 67 ரன்களுக்கு சுருண்டு இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறது. பஞ்சாப் சார்பில் சந்தீப் ஷர்மா 4 விக்கெட்டுகளும் வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளும் எடுக்க அதன்பின் 68 ரன்களை 7.5 ஓவரில் எடுத்து அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

3.2017 ஐபிஎல் தொடரில் டெல்லியில் நடந்த 45-ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை டெல்லியை புரட்டி எடுத்து 212/3 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக லெண்டில் சிம்மன்ஸ் 66 (43) ரன்கள் எடுத்த நிலையில் அதைத் தொடர்ந்து சேசிங் செய்த டெல்லி மும்பையின் துல்லியமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெறும் 14.3 ஓவரில் 66 ரன்களுக்கு சுருண்டு இந்த பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. மும்பை சார்பில் கரண் சர்மா மற்றும் ஹர்பஜன் ஆகியோர் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி தலா 3 விக்கெட்கள் எடுத்து 146 ரன்கள் வித்தியாசத்திலான பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

2. இந்த பட்டியலில் எதிர்ப்புறம் பெங்களூரு இருப்பது இந்த ஒரே இடமாகும். கடந்த 2009 ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட நிலையில் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு கேப்டன் ராகுல் டிராவிட் அதிரடியில் 66 (48) 20 ஓவர்களில் 133/8 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தானை 15.1 ஓவரில் வெறும் 58 ரன்களுக்கு சுருட்டிய பெங்களூரு 75 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதற்கு காரணகர்த்தாவாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க : கவுண்டி கிரிக்கெட்டில் அசத்தல். சம்பவம் செய்த புஜாரா. என்ன தெரியுமா? – இந்திய அணிக்குள் மீண்டும் வருவாரோ?

1. இந்த போட்டியை பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை என்றாலும் கடந்த 2017 ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த 27-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவை 131 ரன்களுக்கு சுருட்டி பெங்களூர் அசத்தியது. ஆனால் அதைத்தொடர்ந்து சுலபமான இலக்கை துரத்திய பெங்களூரு கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தாவின் அதிரடியான பந்துவீச்சில் வெறும் 9.4 ஓவரில் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. அப்போட்டியில் கிறிஸ் கெயில், ஏபி டிவிலியர்ஸ், விராட் கோலி என 11 பேரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

Advertisement