இந்த வருஷமாவது கோப்பையை ஜெயிப்பாங்கனு பாத்தா ஆர்.சி.பி அணிக்கு இப்படி ஒரு சிக்கலா ? – விவரம் இதோ

Rcb
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரும் பாதிப்புக்கு பிறகு தற்போது மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த வருடம் மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு இறுதியாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரை நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகின.

rcb

- Advertisement -

மேலும் இந்த தொடருக்கான அட்டவணையும் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தொடருக்கான வீரர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறை குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுகுறித்த முழுஅறிவிப்பும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்னதாக அனைத்து அணிகளும் தனிமைப் படுத்திக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டால் மட்டுமே இந்த தொடரில் விளையாட சாத்தியம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தொடரில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் தொடரில் முதல் பாதியில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2018csk

ஏனெனில் தென் ஆப்பிரிக்க நாட்டில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் வெளிநாட்டு போக்குவரத்துக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் எவ்வாறு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஆர்சிபி அணியின் தூணாக கருதப்படும் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெயின் ஆகியோரும் விளையாட இருந்தனர். இந்நிலையில் அவர்கள் அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனால் அது இரு அணிக்கும் பலத்த அடியாக பார்க்கப்படும். மேலும் இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும் ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் வலுவிழந்து காணப்படும் ஆர்.சி.பி அணிக்கு இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ABD

மேலும் இதற்கு என்ன தீர்வு என்று தற்போது ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆனாலும் தனி விமானம் மூலம் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்யுமா ? மேலும் இந்த தொடரில் அவர்களை கலந்துகொள்ள சம்மதிக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement