ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விராட் கோலி 2008 ஆம் ஆண்டிலிருந்து ஆடிவருகிறார். அதுமட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். ஆனால் தற்போது வரை ஒரு முறை கூட இந்த அணி கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு மூன்றாவது இடத்தையும் 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கும் சென்றதே அந்த அணியின் பெரிய சாதனை.
அதன் பின்னர் பெரிதாக எந்த ஒரு சாதனையும் இந்த அணியிடம் இருந்து வரவில்லை இதற்கு அனைத்துக்கும் காரணம் விராட் கோலியின் தலைமை தாங்கும் தன்மை தான் என்ற கருத்துக்கள் தற்போது உலா வர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக இந்த வருட ஐபிஎல் தொடரில் அவரது தலைமைப் பண்பும் மோசமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது முதல் போட்டியில் எப்படியும் ஜெயித்தாகிவிட்டது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்தடுத்து தொடர்ந்து தாங்களாகவே விக்கெட்டுகளை இழந்ததால் பெங்களூர் அணி வெற்றி பெற்றது என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் அணி தேர்விலிருந்து அணி வீரர்களை பயன்படுத்தும் விதம் வரை அனைத்தும் பெரும் பிரச்சனையாகவே இருந்ததாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் நன்றாக பந்துவீசும் வாஷிங்டன் சுந்தருக்கு ஒரே ஓவர் தான் அந்த போட்டியில் கொடுத்திருந்தார். அதிலும் எட்டாவது ஓவரில் கொடுத்துவிட்டு, சுந்தர் குறைந்த ரன்கள் கொடுத்திருந்த போதிலும் அதனை அடுத்து உமேஷ் யாதவ் போன்ற ரன்களை வாரி வழங்கும் பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்திருக்கிறார் விராட் கோலி. மேலும் அணியை தேர்ந்தெடுப்பதிலும் கோட்டை விட்டு விடுகிறார் என்று தெரிகிறது.
மொயின் அலி தற்போது வரை ஆடவில்லை. மேலும், பார்த்தீவ் பட்டேல் வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். இப்படி பல வீரர்களையும் சரியாக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக அணியின் மூத்த வீரர் ஆக இருக்கும், ஆரோன் பின்ச் கேப்டனாக நியமிக்க வேண்டுமென்றும் பெங்களூரு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.