ஐபிஎல் 2023 சீசனில் அவங்களோட பவுலிங் அட்டாக் தான் சிறப்பா இருக்கு – ரசிகர்கள் எதிர்பாரா அணியை பாராட்டும் மஞ்ரேக்கர்

Sanjay
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது லட்சிய முதல் கோப்பையை முத்தமிட்டு 15 வருடங்களாக சந்தித்து வரும் கிண்டல்களை உடைக்க்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. கடந்த 2008 முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற தரமான வீரர்கள் தலைமையில் கடுமையாக போராடி 2009, 2011 ஆகிய வருடங்களில் ஃபைனல் வரை சென்ற அந்த அணி கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தது.

Virat Kohli Shane watson RCB

- Advertisement -

அதை விட 2013 முதல் விராட் கோலி தலைமையில் ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் விளையாடியும் முக்கிய நேரங்களில் சொதப்புவதை வழக்கமாக வைத்திருந்த அந்த அணி 2016 ஃபைனலில் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டது யாராலும் மறக்க முடியாது. அதனால் அதிகப்படியான கிண்டல்களுக்கு உள்ளான அந்த அணி விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த நிலையில் பதவி விலகிய அவருக்கு பதிலாக டு பிளேஸிஸ் தலைமையில் கடந்த வருடம் அசத்திய பெங்களூரு வழக்கம் போல பிளே ஆஃப் சுற்று வரை சென்று வெளியேறியது.

சிறந்த அட்டாக்:
இருப்பினும் இந்த வருடம் புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் அந்த அணிக்கு விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளது முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக 15 வருடங்களாக பெங்களூரு கோப்பை வெல்ல முடியாமல் தவிப்பதற்கு விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன்களை அடித்தாலும் அதை அந்த அணி பவுலர்கள் வள்ளலாக வாரி வழங்குவதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த வருடம் மற்ற அணிகளை காட்டிலும் பெங்களூரு அணியின் பந்து வீச்சு கூட்டணி மிகச் சிறப்பாக இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

Reece-Topley

குறிப்பாக ஹேசல்வுட் விளையாடவில்லை என்றாலும் 2022 ஜூலை மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த இங்கிலாந்தின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி ஏற்கனவே இருக்கும் பவுலர்களுடன் பலம் சேர்ப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அவர்களுடைய வேகப்பந்து வீச்சு இம்முறை நல்ல ஆழத்துடன் இருக்கிறது. ஒருவேளை ஜோஸ் ஹேசல்வுட் ஃபிட்டாக இல்லையென்றாலும் அதை ஈடு செய்ய அவர்களிடம் ரீஸ் டாப்லி இருக்கிறார்”

- Advertisement -

“அதே போல் சுழல் பந்து வீச்சு துறையில் வணிந்து ஹசரங்கா பலம் சேர்க்கிறார். அவர்களுடன் முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரும் உள்ளனர். அத்துடன் கிளன் மேக்ஸ்வெல் தேவைப்படும் நேரத்தில் பந்து வீசுவார் என்பதால் அவர்களுடைய பவுலிங் கச்சிதமாக இருக்கிறது. எனவே என்னை பொறுத்த வரை இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த பவுலிங் அட்டாக் கொண்ட அணியாக ஆர்சிபி திகழ்கிறது. அது அவர்களுக்கு இம்முறை துருப்புச் சீட்டாக மாறியுள்ளது” என்று கூறினார்.

Virat Kohli Sanjay Manjrekar

அவர் கூறுவது போல முகமது சிராஜ் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் ரீஸ் டாப்லி, ஹர்ஷல் படேல் ஆகியோரால் வேகப்பந்து வீச்சு கூட்டணி சிறப்பாகவே இருக்கிறது. அதே போல் உலகின் நம்பர் ஒன் டி20 ஸ்பின்னர்களில் ஒருவராக கருதப்படும் ஹசரங்கா சிறப்பான ஃபார்மில் இருக்கும் நிலையில் சபாஷ் அகமது அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.

இதையும் படிங்க: சிஎஸ்கே’வுடன் ஜடேஜாவுக்கு சண்டை ஏற்பட்டது உண்மை தான், அவர் தான் பேசி சமாதானம் பண்ணாரு – வெளியான செய்தி இதோ

எனவே நீண்ட சீசன்கள் கழித்து நல்ல பந்து வீச்சு கூட்டணியை கொண்டுள்ள பெங்களூரு இம்முறை கச்சிதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. மேலும் வெறித்தனமான ஆதரவு கொடுக்கக்கூடிய பெங்களூரு ரசிகர்கள் முன்னிலையில் 2019க்குப்பின் சின்னசாமி மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு மற்றுமொரு மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement