இவர் இருக்கும் வரை பெங்களூரு அணி ஜெயிக்காது. முக்கிய வீரரை வெளியேற்ற ரசிகர்கள் வைத்த – கோரிக்கை

Umesh
- Advertisement -

ஐபிஎல் தொடரில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று மைதானங்களில் மட்டும் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. முதல் நான்கு போட்டி முடிவடைந்த நிலையில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக மூன்றாவது போட்டி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி தட்டுத்தடுமாறி இறுதியில் வெற்றி பெற்றது.

srh

இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 163 ரன்கள் எடுத்தது இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதாக எட்டக்கூடிய இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

- Advertisement -

அந்த அணியின் அனைத்து வீரர்களும் நன்றாக ஆடினார். ஆனால், கடைசி இரு ஓவர்களில் கிட்டத்தட்ட 7 விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைவரும் ஆல் அவுட் ஆகி பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

shankar

இறுதியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும் அந்த அணியின் வெற்றி அவர்கள் போராடி கிடைக்கவில்லை. எதிரணி வீரர்கள் செய்த தவறால் கிடைத்தது என்ற விமர்சனம் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டியின் போது அதிக ரன்களை வாரி வழங்கிய உமேஷ் யாதவ் மீண்டும் அணியில் இருக்கக்கூடாது என்பதுபோல் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

umesh 1

மேலும், இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 48 ரன்களை வாரி வழங்கியிருக்கிறார் அவரது இந்த மோசமான பந்துவீச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் தற்போது கிண்டல் ஆக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு பதிலாக இளம்வீரர் யாரவது இருந்தால் அவருக்கு வாய்ப்பளியுங்கள் என்று காட்டமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement