மும்பை அணியுடன் ஐ.பி.எல் முதல் போட்டியில் மோதவுள்ள அணி இதுதான் – விவரம் இதுதான்

CskvsMi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் இங்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. அபுதாபி, ஷார்ஜா, துபாய் ஆகிய நகரங்களில் மொத்தம் 60 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே இந்த தொடருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Dubai

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு பயணித்து விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் கிட்டதட்ட பயிற்சிகளை தொடங்கிவிட்டன. மூன்று வாரங்களே உள்ள நிலையில் இதுவரை போட்டி அட்டவணையை வெளியிடப்படாமல் உள்ளதால் ரசிகர்களிடையே போட்டி அட்டவணை குறித்து பெரிய கேள்வி எழும்பியுள்ளது.

மேலும் இந்த தொடரில் பங்கேற்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் பங்கேற்பது குறித்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் அதுமட்டுமில்லாமல் ரெய்னா தனது தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார் . தற்போது பாதிப்பில் உள்ள இரண்டு வீரர்கள் தவிர 11 பேர் சிஎஸ்கே நிர்வாகத்தின் சார்பாக கொரோனாவில் சிக்கியுள்ளனர்.

csk-vs-mi

இதன் காரணமாக சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் தொடரப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி அட்டவணையில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி தொடக்கத்தில் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத திட்டமிட்டிருந்தது. இப்போது இந்தப்போட்டி நடைபெறாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

MI

மும்பை அணியுடன் வேறு ஒரு அணியே தொடக்க போட்டியில் விளையாடும் வகையில் ஐபிஎல் அட்டவணை மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மும்பை அணியுடன் பெங்களூரு அணி மோதும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை கோப்பையை கைப்பற்றாத பெங்களூரு அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement