டிரேடிங் முறையில் மும்பை அணியிலிருந்து தரமான வீரரை தட்டி தூக்கிய ஆர்.சி.பி – இதுதான் செம செலக்ஷன்

RCB
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துதுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அடுத்த 17-வது சீசனானது 2024-ஆம் ஆண்டு கோடை காலத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஐ.பி.எல் தொடரின் வீரர்களுக்கான மினி ஏலமானது துபாயில் வரும் டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக தற்போது 10 அணிகளை சேர்ந்த நிர்வாகங்களும் தங்களது அணிகளில் தக்க வைத்த வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிடுமாறு நவம்பர் 26-ஆம் தேதி வரை ஐ.பி.எல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று வெளியான தகவலின் படி பல்வேறு அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை வெளியேற்றியும், தேவைப்படவும் வீரர்களை அணியில் தக்க வைத்தும் தங்களது பட்டியலை வெளியிட்டிருந்தன. அதுமட்டும் இன்றி சில அணிகள் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றம் செய்து கொண்டனர். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் செய்யப்பட்டது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியது.

ஏனெனில் ஒரு ஐபிஎல் கேப்டனையே மும்பை அணி இப்படி டிரேடிங் மூலம் மாற்றியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருந்தது. இந்நிலையில் சத்தமே இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த அதிரடி வீரர் ஒருவரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி டிரேடிங் செய்துள்ளது தற்போது பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 17.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆல்ரவுண்டான கேமரூன் கிரீன் தற்போது பெங்களூரு அணி ட்ரேடிங் முறையில் தங்களது அணியில் இணைத்துள்ளது. அதிரடி ஆட்டக்காரரான கேமரூன் கிரீன் பந்து வீச்சிலும் கை கொடுக்கக் கூடியவர் என்பதனால் அவரை மிகப் பெரிய தொகைக்கு மும்பை அணி ஏலம் எடுத்திருந்தது.

இதையும் படிங்க : குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறிய ஹார்டிக் பாண்டியா – குஜராத் அணியின் புதிய கேப்டன் யார் தெரியுமா?

அண்மையில் வெளியான தகவலின் படி : ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்கு மாறிய பிறகு பெரிய தொகையில் உள்ள யாரையாவது வெளியேற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சிக்கவே அந்த வாய்ப்பினை பயன்படுத்திய பெங்களூரு அணி அவரை தங்களது அணியில் இணைத்துள்ளது. ஏற்கனவே சரியான காம்பினேஷன் இன்றி சிக்கி தவிக்கும் பெங்களூரு அணிக்கு கேமரூன் கிரீனின் வருகை நிச்சயம் ஒரு பலத்தை தரும் என்றே கூறலாம்.

Advertisement