குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறிய ஹார்டிக் பாண்டியா – குஜராத் அணியின் புதிய கேப்டன் யார் தெரியுமா?

GT
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலமானது எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நவம்பர் 26-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

அந்த வகையில் நேற்று 10 ஐபிஎல் அணிகளுமே தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது குஜராத் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில்லை அறிவித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகிய கில் 2022-ஆம் ஆண்டு அந்த அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பின்னர் குஜராத் அணிக்காக நேரடியாக தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு சீசன்களாக விளையாடி வந்தார். இதுவரை குஜராத் அணிக்காக 16 போட்டியில் விளையாடியுள்ள அவர் 483 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்ற குஜராத் அணி நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலும் இறுதி போட்டி வரை சென்று அசத்தியது. அந்த இரண்டு தொடர்களிலும் சுப்மன் கில் தனது அட்டகாசமான பங்களிப்பை குஜராத் அணிக்கு வழங்கி இருந்தார். எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் அவர் தற்போது அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : போன மேட்ச் அவரு.. இந்த மேட்ச் இவரா? தொடரும் ஆஸ்திரேலிய வீரர்களின் அட்டகாசம் – நடந்தது என்ன?

இந்நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் இதுகுறித்து கூறுகையில் : குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்களுடைய அணி நிர்வாகம் என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி. அடுத்த தொடரில் நான் குஜராத் அணியை வழிநடத்த ஆவலோடு காத்திருக்கிறேன் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement