திடீர் மாற்றத்திற்கு பிறகு அதிரடியாக திரும்பி வந்த ஆர்.சி.பி – ரசிகர்கள் ஆச்சரியம்

Rcb

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்போது ஏற்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விடயம் அணி வீரர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தின.

இந்த திடீர் மாற்றம் குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, ஏபிடி மற்றும் சாஹல் ஆகியோர் தங்களது கருத்தினை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் லோகோ திடீரென நீக்கப்பட்டது.

இது குறித்து விமர்சனங்கள் ஏகப்பட்ட கருத்துகளை வெளியாக தற்போது அந்த அணி தங்களது புதிய லோகோவை அதிகாரபூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் சில புதிய பதிவுகளையும் பெங்களூரு நிர்வாகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தினால் சில வதந்திகளும் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.