பெங்களூரு தோல்வி : சொதப்பலுக்கு காரணமான வீரரின் மனைவியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – வேதனையில் ஆஸி வீரர்

RCB
- Advertisement -

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது பெங்களூர் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 138 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக விராத் கோலி 39 ரன்களை குவித்தார். அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

Morgan

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய டேனியல் கிறிஸ்டியன் பந்துவீச்சிலும் 1.4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக 12 வது வரை வீசிய அவர் 3 சிக்சர்களுடன் 22 ரன்களை வாரி வழங்கினார். இந்த ஓவர்தான் போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோன்று கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இருந்தபோது கடைசி ஓவரை வீசிய அவர் முதல் பந்திலேயே பவுண்டரி கொடுத்தார்.

பவுலிங்கில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவரின் மீது அதிருப்தியில் இருந்த ரசிகர்கள் சமூக வலைதளம் மூலமாக அவரை திட்டி தீர்த்தது மட்டுமின்றி அவரின் மனைவியையும் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று வரம்பு மீறி ஆபாச வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கிறிஸ்டியன் தனது சமூக வலைதள பக்கம் மூலம் ரசிகர்களிடம் இதுபோன்று நடந்து கொள்ள வேண்டாம் என்று வேதனையுடன் பதிவிட்டு இருந்தார்.

christian 1

மேலும் இது தொடர்பாக மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் அவரது ட்விட்டர் பக்கத்தில் : ஆர்.சி.பி இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடியது. ஆனாலும் இறுதியில் நாங்கள் அடைய நினைத்த இடத்தில் இருந்து பின் தங்கி விட்டோம். இந்த தோல்விக்கு பிறகு அருவெறுப்பான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. நாங்களும் மனிதர்கள் தான் ஒவ்வொரு நாளும் எங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறோம்.

- Advertisement -

chrisitan

அணி தோற்றால் வீரர்களை விமர்சிப்பது போன்ற மோசமான செயல்களைச் செய்யாமல் நல்ல மனிதராக நடந்து கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் உண்மையான அன்பை பகிர்ந்த ரசிகர்களுக்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார். மேலும் டேனியல் கிறிஸ்டியன் பதிவிட்ட கருத்தில் : எனது மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று பாருங்கள் ரசிகர்கள் அவரை படுமோசமாக திட்டி உள்ளார்கள்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு அபராதமா ? நடுவருடன் நடைபெற்ற சூடான மோதல் – என்ன நடந்தது ? – விவரம் இதோ

இன்று மோசமான போட்டிதான். தயவு செய்து அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த தொடர் முழுவதும் 9 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ்டியன் பேட்டிங்கில் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேபோன்று பவுலிங்கிலும் 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement