எல்லாமே கூடி வந்த நேரத்துல இப்படி ஆயிடுச்சே. இணையத்தை தெறிக்கவிட்ட பெங்களூரு அணியின் ரசிகர்கள் – மீம்ஸ் இதோ

RCB

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போது இந்த வருட கோப்பை எங்களுக்குதான் என்று கூறும் பெங்களூரு அணியின் ரசிகர்கள் பட்டாளதுக்கு இதுவரை ஏமாற்றமே கிடைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஜாம்பவான் அணிகளாக பார்க்கப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் மத்தியில் அந்த அணிகளுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு ஒரு பெரிய அணியாக ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பார்க்கப்படும் அணியாக பெங்களூர் அணி திகழ்கிறது.

rcbvsdc

ஏனெனில் இதுவரை இவர்கள் கோப்பையை கைப்பற்ற வந்த என்றாலும் இந்த அணிக்கான ரசிகர்கள் மத்தியில் எந்தவிதமான சலனமும் இல்லை என்றே கூறலாம். கோப்பையை கைப்பற்ற வில்லையே தவிர மற்றபடி பெங்களூரு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை என்றும் இன்றளவும் ரசிகர்கள் பெங்களூரு அணியை ஆதரித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று பலமான அணியாக பெங்களூரு அணி உருவெடுத்தது. மேலும் இந்த வருட அணியில் வீரர்கள் சரிசமமான அளவில் பலத்துடன் இருப்பதால் இந்த தொடரை கைப்பற்றும் என்று கூட பெங்களூர் அணி பார்க்கப்பட்டது.

7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் அனைத்து தகுதியும் உள்ளது என பெங்களூரு அணியின் ரசிகர்கள் கொண்டாடி கொண்டாடினார் ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த வருடம் சிறப்பாக துவங்கிய பெங்களூரு அணிக்கு இப்படி ஒரு நிலைமையா ? என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வருடம் நிச்சயம் நாங்கள் கோப்பையை கைப்பற்றுவோம் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் இப்படி நடந்து விட்டதே என்று அவர்கள் போட்டுள்ள பல பதிவுகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த மீம்ஸ்களில் சில இதோ :

- Advertisement -

Advertisement