16 கோடி குறைத்து அட்டகாசமான வீரரை ஏலத்தில் எடுத்த நடப்பு சாம்பியன் ஆர்.சி.பி – விவரம் இதோ

RCB
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது இன்று டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபி நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் பத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது அணிகளுக்கு தேவையான வீரர்களை விலைக்கு வாங்கி தங்களது அணியை பலப்படுத்தி வருகின்றனர்.

அட்டகாசமான வீரரை ஏலத்தில் எடுத்த ஆர்.சி.பி :

அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய அணிகள் மட்டுமே பெரிய தொகையை வைத்துக்கொண்டு ஏலத்தில் களமிறங்கி வேளையில் மற்ற அணிகள் தங்களது கையிருப்பு தொகையை வைத்து ஒரு சில முக்கிய வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்தி வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரை கைப்பற்றிய நடப்பு சாம்பியன் ஆர்.சி.பி அணியானது இந்த மினி ஏலத்தில் ஒரு முக்கியமான வீரரை வாங்கியுள்ளது பெரியளவில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதோடு ஆர்சிபி அணியின் இந்த தேர்வு மிகச் சரியான ஒன்று என்றும் அடுத்த ஆண்டு அந்த அணியில் பிளேயிங் லெவனில் விளையாடக்கூடிய ஒரு பொருத்தமான நபரை அந்த அணி வாங்கியுள்ளதாகவும் ரசிகர்களும் இந்த தேர்வினை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த மினி ஏலத்தில் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட வெங்கடேஷ் ஐயரை பெங்களூரு அணி 7 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டு 23 கோடியே 75 லட்சம் என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏலம்போன அவர் கொல்கத்தா அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட வேளையில் அவரை 16 கோடி குறைத்து 7 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கி அசத்தியுள்ளது. கடந்த ஆண்டு அவருக்கு மோசமான ஆண்டாக அமைந்ததால் கொல்கத்தா அணி அவர் மீது கவனம் செலுத்தவில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் ஏலம்: 12 நிமிடத்தில் 28.40 கோடிக்கு 2 இளம் பிளேயர்ஸ்.. திரும்பி பார்க்க வைத்த சிஎஸ்கே

அதேவேளையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயரை பெங்களூரு அணி விலைக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் பெங்களூரு அணியின் மிடில் வரிசையில் உள்ள குறைகளை நீக்க அவர் சிறந்த தேர்வாக இருப்பார் என்றும் ரசிகர்கள் இந்த தேர்வை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement