பெங்களூரு அணியில் இருக்கும் இந்த ஓட்டையை அடைக்கும் வரை அவர்களால் கோப்பையை ஜெயிக்க முடியாது – விவரம் இதோ

RCB2019

ஐபிஎல் அணிகளில் ஒருமுறைகூட கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று முறை இறுதிப் போட்டிக்குச் சென்று இருக்கிறது. அவ்வளவுதான் இந்த அணியின் மிகப்பெரிய சாதனை. ஆனால் வருடாவருடம் மிகச் சிறந்த வீரர்களை கொண்டு இந்த அணி கட்டமைக்கப்படும். விராட் கோலியின் தலைமையில் எட்டு வருடங்களாக இந்த அணி விளையாடி வருகின்றது. ஆனாலும் எந்த ஒரு பெரிய சாதனைகள் செய்யப்படவில்லை.

rcb 2

ஐபிஎல் போட்டி 12 முறை நடைபெற்று இருந்தாலும், குறைந்தது ஒரு முறையாவது இந்த அணி கோப்பையை வென்று இருக்க வேண்டும். ஆனால் பெங்களூரு அணியில் வருடாவருடம் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் பெங்களூர் அணி கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பில்லை எனவும், அந்த அணியில் ஒரு முக்கிய பிரச்சனை இருக்கிறது. அந்த பிரச்சனையை தீர்க்கப்படாத வரையில் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “பெங்களூரு அணியின் விராட் கோலி மற்றும் ஏபி டிவிலியர்ஸ் ஆகிய இரண்டு வீரர்களை மட்டுமே மொத்தமாக சார்ந்து இருக்கிறது. இந்த இருவரும் நன்றாக ஆடினால் மட்டுமே அணியும் நன்றாக விளையாடும், எந்த சிக்கலும் இல்லாமல் போட்டி செல்லும். ஆனால் இருவரில் ஒருவர் நன்றாக ஆடாவிட்டாலும் அணி அப்படியே சரிந்து விடும்.

Moeen

ஆனால் தற்போது மிடில் ஆர்டரில் மொயின் அலி, சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், வாசிங்டன் சுந்தர், ஆகியோர் இருப்பதால் ,மிடில் ஆர்டரில் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. ஓரளவிற்கு சரியாகி விட்டது . ஆனால் தரமான டெத் பவுலர்கள் இல்லாதது இன்னும் இந்த அணிக்கு பிரச்சினையாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

siraj

ஏனெனில் கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெயின் ஆகிய வீரர்கள் எல்லாம் இறுதி ஓவர்களில் பந்துவீசிய அனுபவம் இல்லாதவர்கள். அவர்கள் துவக்க ஓவர்களை மட்டுமே வீசி பழக்கப்பட்டவர்கள். அதே நேரத்தில் உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவதீப் சைனி ஆகியோர்களை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அவர்களும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி இறைபவர்கள் எனவே டெத் ஓவர் பவுலர்ஸ் மட்டும் தான் இவர்களுக்கு இருக்கும் பிரச்சனை” என்று தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.