கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது டூப்ளிசிஸ் ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட்டதால் அனைத்து அணிகளும் குறிப்பிட்ட வீரர்களையே தக்க வைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக ஆர்.சி.பி அணியில் இருந்து அந்த அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் தக்கவைக்கப்படாமல் கழட்டி விடப்பட்டார். மேலும் மெகா ஏலத்தின் போதும் அவரை ஆர்.சி.பி அணி ஏலத்தில் எடுக்காமல் அவரை தவிர்த்து பல்வேறு நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தது.
விராட் கோலியை கேப்டனாக நியமிக்காதது ஏன்? : ஆன்டி பிளவர்
ஆனாலும் அணியின் கேப்டனாக இருக்கும் அளவிற்கு தகுதியுடைய எந்த வீரர்களையும் அந்த அணி ஏலத்தில் எடுக்கவில்லை. இதன் காரணமாக மீண்டும் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது. இதன் காரணமாக மீண்டும் கோலியை கேப்டனாக காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஆர்.சி.பி அணியின் நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் அந்த அணியின் புதிய கேப்டனாக ராஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக விராட் கோலியின் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில் விராட் கோலி ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை? என்பது குறித்து அந்த அணியில் பயிற்சியாளரான ஆன்டி பிளவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : புதிய கேப்டன் உரையாடலில் நாங்கள் விராட் கோலியிடமும் நிறைய கருத்துக்களை கேட்டோம். அவரும் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்தார். அதுமட்டும் இன்றி அந்த விவாதத்தின் போது நேர்மையாக இருந்த அவர் முதிர்ச்சி அடைந்த தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
எதிர்வரும் சீசனுக்காக அவர் ஒரு வீரராக ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் விளையாட இருப்பது மிகப்பெரிய விடயம். நாம் அவரைப் பற்றி நல்ல விஷயங்களை பேச வேண்டும். விராட் கோலி கேப்டன் பதவியை விரும்பவில்லை. அணிக்காக முழு பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பட்டிதாரை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இதையும் படிங்க : குல்தீப் யாதவ் செய்த தவறு இதுதான்.. ஆதில் ரஷீதை பாத்து கத்துக்கோங்க – சஞ்சய் மஞ்சரேக்கர் காட்டம்
எனவே நிச்சயம் இந்த முறையும் டூப்ளிசீஸிற்கு உதவியது போல் பட்டிதாருக்கும் விராட் கோலி உதவுவார் என்று நினைக்கிறோம். மேலும் இயல்பாகவே அவர் ஒரு தலைவர் என்பதால் அவருக்கு கேப்டன் பொறுப்பெல்லாம் பெரிய விடயம் கிடையாது. அவர் நிச்சயம் அணிக்காகவே விளையாட விரும்புகிறார் என ஆன்டி பிளவர் கூறியது குறிப்பிடத்தக்கது.



