இந்த முறையும் அப்படி நடந்தா ஒவ்வொரு வீரராக ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் – பயிற்சியாளர் கண்டிப்பு

Hesson
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

இந்நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளரான மைக் ஹசன் வீடியோ மூலம் பெங்களூரு அணிக்கு ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது : துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். என்னை பொருத்தவரை அபுதாபி மைதானம் பெரிய மைதானம். இந்த மைதானத்தில் 150 முதல் 160 எங்கள் எடுத்தாலே வெற்றிக்கு போதுமானதாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் மைதானங்களை பற்றிய அனைத்து தரவுகளையும் எடுத்து வைத்துள்ளோம் எனவே அதற்கு தகுந்தவாறு செயல்பட்டால் பெங்களூர் அணி வெற்றி பெறுவது உறுதி. பெங்களூர் அணியில் அதிரடி வீரர்கள் பலர் இருந்தாலும் கடந்த 12 ஆண்டுகளில் ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை. அணியில் உள்ள குறைகள் எல்லாம் கலைந்து தற்போது இந்த தொடரில் வலுவாக மேம்படுத்தி வருகிறோம்.

Hesson 1

மேலும் அணியில் உள்ள குறைகளை நீக்க நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளோம். எங்கு சொதப்புகிறோம் ? எப்படி சொதப்புகிறோம் ? என்பதையும் கண்டுபிடித்து உள்ளோம். அதனால் அந்த தவறை இந்த வருடம் செய்யமாட்டோம். அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெறவே நாங்கள் விரும்புகிறோம் .தகுதியான பலம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருக்கின்றனர். அதனால் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றுவது என்பது எங்களால் சாத்தியப்படும் என தெரிவித்தார்.

rcb 2

மேலும் கடந்த கால கட்டங்களில் சிறப்பாக விளையாடாத வீரர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வருடமும் ஒருவேளை மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினால் அணியில் இருந்து ஓரங்கட்ட அதிக வாய்ப்புள்ளது என்று கண்டித்துள்ளார். மேலும் வெற்றி எங்களுக்கு முதன்மையானது அதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் இல்லை என்று அதிரடியாக தனது கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement