
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. இம்முறை ரஜத் படிதார் தலைமையில் ஆரம்பம் முதலே மிரட்டி வரும் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்து குவாலிஃபயர் 1 போட்டிக்கு தகுதி பெற்றது. அத்துடன் ஒரு ஐபிஎல் தொடரில் 7 வெளியூர் போட்டிகளிலும் வென்ற முதல் அணியாக ஆர்சிபி சாதனை படைத்தது.
அதே வேகத்துடன் மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப்பை அனல் பறக்க பவுலிங் செய்த ஆர்சிபி வெறும் 101 ரன்களுக்கு சுருட்டி வீசியது. பின்னர் பேட்டிங் செய்த ஆர்சிபி 10 ஓவரில் 106-2 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
அதனால் 2009, 2011, 2016 ஆகிய வருடங்களுக்குப் பின் 4வது முறையாக ஆர்சிபி ஃபைனலுக்கு சென்றது. அந்த அணியில் இதுவரை 9 வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்கள். அப்படி உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் இம்முறை ஆர்சிபி கண்டிப்பாக முதல் கோப்பையை தட்டித் தூக்கப் போகிறது என்ற நம்பிக்கையுடன் பெங்களூரு ரசிகர்கள் உற்சாகத்தில் திழைத்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2011ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று நடைபெற்றது. அப்போது முதல் இதுவரை 14 ஐபிஎல் தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த 14 தொடர்களில் குவாலிஃபயர் 1 போட்டியில் வென்று நேரடியாக ஃபைனலுக்கு சென்ற அணி 11 முறை கோப்பைகளை வென்றுள்ளது.
அதிலும் 2018 முதல் 2024 வரை கடைசியாக நடைபெற்ற 7 ஐபிஎல் தொடர்களில் குவாலிபயர் 1 போட்டியில் வென்று ஃபைனலுக்கு சென்ற அணி கோப்பையை 100% வென்றுள்ளது. இந்த வரலாற்றின் (2018 – 2024) அடிப்படையில் இம்முறை ஆர்சிபி முதல் கோப்பையை வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இது போக ஆர்சிபி அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல் தம்முடைய கேரியரில் 6 ஃபைனல்களில் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க: 60 பந்தில் சாதனை.. 9 மேட்ச் வின்னர்ஸ்.. ஃபைனலில் யார் வந்தாலும் வீழ்த்தி கோப்பையை வெல்லத் தயாரான ஆர்சிபி
சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக அவர் 2012 சாம்பியன்ஸ் லீக், 2020 பிபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்காக 2015 உலகக் கோப்பை, 2021 டி20 உலகக் கோப்பை, 2023 உலகக் கோப்பை ஃபைனல்களில் விளையாடிய வெற்றி பெற்றுள்ளார். மேலும் 2021 ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி கோப்பையை வென்றுள்ள ஹேசல்வுட் இதுவரை ஒரு தோல்வியைக் கூட சந்தித்ததில்லை. அந்த வகையில் அதிர்ஷ்டமிக்க வீரராக திகழும் அவர் இம்முறை விளையாடும் ஆர்சிபி அணியும் ஃபைனலில் கோப்பையை வெல்ல பிரகாச வாய்ப்புள்ளது.