மீண்டும் சூப்பர் ஓவர் வரை சென்ற மும்பை – பெங்களூரு போட்டி. பெங்களூரு அணி த்ரில் வெற்றி – விவரம் இதோ

kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் அடித்தது.

rcbvsmi

- Advertisement -

துவக்க வீரர்கள் படிக்கல் 54 ரன்களும், பின்ச் 52 ரன்களும் அடித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த கோலி 3 ரன்களுக்கு ஆட்டம் இருந்தாலும் டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 55 ரன்களும், துபே 27 ரன்கள் அடித்து அணி அணியின் ரன் குவிப்புக்கு உதவினர். அதனைத்தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்கள், டிகாக் 14 ரன்கள், சூர்யகுமார் யாதவ் டக் அவுட் என 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

ஆனால் பின்னால் நங்கூரம் பாச்சிய இஷான் கிஷன் மற்றும் பொல்லார்ட் ஜோடி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற கட்டத்திலிருந்து போட்டியை சிறப்பாக இறுதிவரை கொண்டுசென்றனர். 5 ஓவருக்கு 90 ரன்கள் தேவை என்ற நிலையிலிருந்து போட்டியை “டை” ஆக்கினார்கள். இஷன் கிஷன் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பொல்லார்ட் 60 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இரு அணிகளும் 201 ரன்களை குவித்தது போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

kishan

சூப்பர் ஓவரில் தான் வெற்றி பெங்களூரில் பக்கம் சென்றது என கூறலாம். ஏனெனில் இந்த போட்டியில் இரு அணிகளைச் சேர்ந்த பவுலர்களும் சரமாறியாக ரன்களை வாரி வழங்கி இருந்தனர். அதனால் இந்த முக்கியமான சூப்பர் ஓவரை யார் பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இறுதி நிலையில் பெங்களூர் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான சைனியிடம் பந்தை கொடுத்தார் கோலி.

Saini

சைனி சூப்பர் வரை சிறப்பாக வீசினார். பொல்லார்ட் மற்றும் பாண்டியா வைத்து சூப்பர் ஓவரை எதிர்கொண்ட மும்பை அணி ஆறு பந்துகளுக்கு 7 ரன்களை மட்டுமே அடித்தது. அதன் பின்னர் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டிவில்லியர்ஸ் மற்றும் கோலி ஆகியோர் சூப்பர் ஓவரில் வெற்றி இலக்கை அடித்து பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தினார்கள். இந்த போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement