இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியானது நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
வரலாற்று சாதனையுடன் இறுதிப்போட்டிக்கு சென்ற ஆர்.சி.பி :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது. பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை குவித்தது.
இதன் காரணமாக 92 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி அடித்த 254 ரன்கள் மூலம் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தி இந்த 2026 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு சென்றடைந்துள்ளது.
அந்த வகையில் ஆர்.சி.பி அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் நாக் அவுட் போட்டிகளின் போது அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக கடந்த 2023 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அடித்த 233 ரன்களே சாதனையாக இருந்து வந்தது.
இதையும் படிங்க : எங்களுடைய அணியின் பலமே இதுதான்.. வெற்றி பெறப்போவது யார்? – ரஜத் பட்டிதார் ஓபன்டாக்
இந்நிலையில் நேற்று ஆர்.சி.பி அணி அடித்த 254 ரன்கள் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அந்த சாதனையை முறியடித்து தற்போது ஐ.பி.எல் வரலாற்றில் நாக் அவுட் சுற்று போட்டிகளில் அதிக ரன்களை குவித்த அணியாக ஆர்.சி.பி அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



