பும்ரா என்முன்னாடி ஒரு குழந்தை. அவர் எனக்கு பந்துவீசுனா துவம்சம் பண்ணிடுவேன் – பாக் வீரர் அலப்பறை

Bumrah

இந்திய அணியின் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய பும்ரா தற்போது சர்வதேச கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பவுலர் ஆக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Bumrah

அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள பல முன்னணி வீரர்கள் வெளிப்படையாக திணறிவருகின்றனர் அந்த அளவிற்கு அவர் திறம்பட பந்துவீசி வருகிறார். பும்ரா வருகைக்கு பிறகு அவரது பந்து வீச்சு இந்திய அணிக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்திய அணிக்காக பும்ரா கிட்டத்தட்ட 215 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பும்ராவின் பந்து வீச்சு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் உலகின் பல்வேறு முன்னணி பவுலர்கள் எதிரே விளையாடி உள்ளேன். நான் ஆடிய காலத்தில் திறமைவாய்ந்த மெக்ராத் வாசிம் அக்ரம் போன்றவர்களுக்கு முன்னால் நான் விளையாடி உள்ளேன். அவர்கள் பந்துவீச்சை பார்த்துவிட்டு தற்போது உள்ள பும்ராவை பார்க்கும்போது அவர் எனக்கு குழந்தை போன்று தெரிகிறார்.

Razzaq

மேலும் அவர் எதிரில் பந்து வீசினால் அவரை எளிதாக நான் ஆக்கிரமித்து அதிரடியாக ஆட முடியும் மேலும் அவரது பந்துவீச்சை என்னால் சிதறடிக்கும் முடியும் என்றும் அவரது வித்தியாசமான பவுலிங் ஆக்சன் மட்டும் தான் அவரது பலம் என்று பும்ரா குறித்து ரசாக் கூறினார். காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரை தவறவிட்ட பும்ரா நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -