வீடியோ : பந்து கையில் தாக்கியதும் சுருண்டு விழுந்து வலியுடன் வெளியேறிய ராயுடு – வைரலாகும் வீடியோ

rayudu 1
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியின் முதல் ஆட்டம் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி துவக்கத்திலேயே சென்னை அணிக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது. மும்பை அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் டிரென்ட் போல்ட் மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் முதல் இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

boult

- Advertisement -

டூபிளெஸ்ஸிஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பிய நிலையில் 4-வது வீரராக அம்பத்தி ராயுடு களமிறங்கினார். ஆரம்பத்திலேயே சரிவினை கண்ட சென்னை அணியை மீண்டும் கட்டமைக்க ராயுடு மற்றும் கெய்க்வாட் ஆகியோரது ஆட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடம் மில்னேவின் எக்ஸ்பிரஸ் வேக பந்துவீச்சில் ராயுடு கையில் அடிபட்டு வலியுடன் வெளியேறினார்.

முதல் இரண்டு பந்துகளை சந்தித்த ராயுடு ரன் எதுவும் எடுக்காத நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தை சந்தித்த போது பந்து ஸ்விங் ஆகி உள்ளே வருவதை கவனிக்காத ராயுடு பந்து வரும்போதும் குனிந்தார். ஆனாலும் பந்து அவரது இடது கையை தாக்கியது. அதனால் தடுமாறி கீழே விழுந்த ராயுடு வலியால் துடித்தார்.

பின்னர் மைதானத்திற்குள் ஓடிவந்த பிசியோ அவரது காயத்தை பரிசோதித்த பிறகு இனியும் அவரால் விளையாட முடியாது என்று தெரிவித்து அவரை வெளியே அழைத்துச் சென்றனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னர் வந்த ரெய்னாவும், தோனியும் விரைவாக ஆட்டமிழந்து வெளியேற ருதுராஜ், ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக சென்னை அணி 156 ரன்கள் அடித்து மட்டுமில்லாமல் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement