வெட்டவெளிச்சமான கிரிக்கெட் ஊழல். அம்பலப்படுத்திய ராயுடு – மறுத்த கிரிக்கெட் நிர்வாகம்

Rayudu
- Advertisement -

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் ராயுடு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசைக்கு இணங்க அவர் தனது முடிவை மாற்றி தான் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட போகிறேன் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார்.

Rayudu

- Advertisement -

அதன்படி சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையிலும் மேலும் சையத் முஷ்டக் அலி கோப்பையில் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக தொடர்ந்து விளையாடினார். இந்நிலையில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல புகார்களை ராய்டு தற்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஒருவருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்தார்.

அதில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் அதிகம் நிறைந்திருப்பதால் பணம் மற்றும் ஊழலால் கிரிக்கெட் சங்கம் தற்போது நிறைந்துள்ளதால் ஹைதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேறும் இது போன்ற சூழலை நாம் ஆதரிக்க கூடாது என்றும் இதனை விசாரிக்க வேண்டும் என்றும் தனது வேண்டுகோளை வைத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இதுகுறித்து ராயுடு கூறும்போது : ரஞ்சிப் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன் ஆனால் ஹைதராபாத் கிரிக்கெட் அணிக்காக நான் இப்போது விளையாட மாட்டேன். ஏனெனில் இந்த கிரிக்கெட் சங்கத்தில் அதிகப்படியான அரசியலும் ஊழலும் நிறைந்துள்ளது. இது குறித்து அஸாருதீனிடம் விவாதித்தேன் அவரும் உரிய முயற்சிகளை எடுப்பதாக அவர் கூறினார். திறமையில்லாத வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Rayudu

பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அணியில் முன்னுரிமை கொடுக்கப் படுகின்றன இதுபோன்ற செயல்களில் இனி நடக்கக் கூடாது என்று கூறியிருந்தார். அம்பத்தி ராயுடு வின் இந்த புகார் குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அஸாருதீனிடம் கேட்டபோது அவர் விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர் அதனால் இவ்வாறு கூறுகிறார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement