MS Dhoni : தோனி இல்லாத குறையை அப்பட்டமாக காட்டிய ராயுடு – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமை

MSdhoni
- Advertisement -

நேற்றைய போட்டியில் சென்னை அணி பேட்டிங்கில் சுத்தமாக சிறப்பாக செயல்படாமல் தோற்றது. அதிலும் குறிப்பாக தோனி இல்லாத மிடில் ஆர்டர் ரொம்ப மோசமாக செயல்பட்டது. துவக்க வீரரான முரளி விஜய் மட்டும் 38 ரன்களை அடித்தார். பின்பு வந்த ராயுடு, ரெய்னா மற்றும் ஜாதவ் என அனைவரும் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த அடுத்தடுத்த விக்கெட் சரிவே சென்னை அணியின் பரிதாபமான தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Rayudu

- Advertisement -

மேலும், மும்பை அணி பேட்டிங் செய்த போது லீவிஸ் ஹர்பஜன் வீசிய 6 ஆவது ஓவரின் கடைசி பந்தில் கட் ஷாட் அடிக்க முயன்று பீட்டன் ஆனார். ஆனால் அந்த பந்தினை ரீப்ளே செய்து பார்க்கும்போது பந்து பேட்டில் பட்டு ராயுடுவின் கைக்கு சென்றது தெரியவந்தது. அதனை ஹர்பஜன் மற்றும் ராயுடு என யாரும் அப்பீல் செய்யவில்லை. ஒருவேளை அப்பீல் செய்து இருந்தால் விக்கெட் கிடைத்திருக்கும். இதனை கண்ட ரசிகர்கள் தோனி இருந்து இருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

Raina

இந்த போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். இறுதி நேரத்தில் பாண்டியா அதிரடியாக 23 ரன்களை குவித்தார்.

Watson

பின்பு 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement