சென்னை அணிக்கு மீண்டும் திரும்பும் 2 முக்கிய வீரர்கள். அதிகாரபூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி

CSK-1
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் சற்று மோசமான செயல் பாட்டை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதற்குக் காரணம் அந்த அணியில் முக்கிய வீரர்கள் இல்லாதது தான் முதலில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் இந்த வருடத்தில் தொடரில் விளையாட போவதில்லை என்று அறிவித்து விட்டு வெளியேறினார்கள்.

CSK

இருந்தாலும் அணியில் இருக்கும் தற்போதைய வீரர்களை வைத்து முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இதற்கு காரணம் அந்த அணியில் இருந்த அம்பத்தி ராயுடு. ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் அம்பத்தி ராயுடு விளையாட வில்லை அதன் காரணமாக சென்னை அணி தோற்றுவிட்டது.

- Advertisement -

சென்னை அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயம் காரணமாக வெளியே இருந்தார். அதுவும் சென்னை அணியின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக பேசப்பட்டது. அதேபோன்று ராயுடுவும் விளாயாடாமல் போக சென்னை அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

இந்நிலையில் இருவரும் காயத்தில் இருந்து மீண்டு விட்டதாகவும் அடுத்த அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவார்கள் எனவும் அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது : அம்பத்தி ராயுடு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது இது சரி செய்யப்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் இவர் களமிறங்குவார்.

Rayudu 3

அதுபோன்று பிராவோவும் தற்போதும் உடற்தகுதியுடன் முழுவலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஆரோக்கியமாக தான் உள்ளார் என தெரிவித்திருக்கிறார் காசிவிஸ்வநாதன். இதன் காரணமாக இவர்கள் இருவரும் அடுத்த போட்டியிலிருந்து தொடர்ந்து களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

Advertisement