விராட் கோலி செய்த இந்த தவறாலே பெங்களூரு அணி தொடர் தோல்வியை அடைந்தது – முன்னாள் பயிற்சியாளர் பேட்டி

Jennings

இந்திய அணியின் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனுமான கோலி ரன் மெஷின் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆண்டுதோறும் தனி நபராக இருந்து அவர் பேட்டிங்கில் பெரிய சாதனைகளைப் படைத்து வந்தாலும் ஒரு கேப்டனாக ராயல் சாலஞ்சர்ஸ் அணியை ஒரு முறை கூட சரியாக நடத்தி கோப்பையை கைப்பற்றியது கிடையாது என்பது அனைவருக்கும் சிறிய வருத்தத்தை அளிக்கும் ஒரு விடயமாகவே இருக்கிறது.

அதற்கு காரணம் யாதெனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை மூன்று முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அப்படி நெருங்கியும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை இந்த தொடர் தோல்விகள் குறித்து பேசிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் கூறுகையில் :

ஆரம்ப காலங்களில் கோலியிடம் இருந்த கேப்டன்ஷிப் தடுமாற்றங்களும் அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து cricket.com என்ற இணையத்திற்கு பேட்டியளித்த அவர் : ஆரம்ப காலங்களில் 30 வீரர்களின் நிலையை கவனிக்கவேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது.

Jennings 1

சில நேரங்களில் விராட் கோலி அதை விலகி நின்று பார்த்துக்கொண்டு இருந்தார் எனவும் கூறியுள்ளார். மேலும் ஒரு கேப்டனாக வீரர்களை அவர் தேர்ந்தெடுக்கும் முறை தவறாக அமைந்தது. அது குறித்து என்னால் அவரிடம் தெளிவாக விவரித்து எடுத்துக்கூற முடியவில்லை.

- Advertisement -

Jennings 2

ஏனெனில் அவர் ஒரு கேப்டனாக அவர் செய்த அந்த தவறான வீரர்களின் தேர்வினால் பல முறை எளிதான சூழல்களிலும் பெங்களூர் அணி தோற்றது. சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்வதிலும் அதில் கோலி முரண்பாடு செய்ததாகவும் அதனால் பெங்களூரு அணி அதல பாதாளத்திற்கு சென்று தோல்வியை சந்தித்தது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.