இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெயிச்சது மட்டும் பெருசு இல்ல. இதுதான் எங்க இலக்கு – ஜடேஜா அதிரடி

Jadeja
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.

indvsaus

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் பலரும் விமர்சிக்க தொடங்கினர். ஆனால் தற்போது இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளதால் அவர்கள் அனைவரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் ரகானே மற்றும் இளம் வீரர்களான முகமது சிராஜ் மற்றும் சுப்மன் கில் ஆகியோரையும் பாராட்டி வருகின்றனர்.

டி20 போட்டியில் அடைந்த காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜடேஜா இந்த இரண்டாவது டெஸ்ட் சிறப்பாக போட்டியில் 57 ரன்கள் 3 விக்கெட்களை மற்றும் இரண்டு கேட்ச்சுகள் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திள்ளார். இதனால் ஜடேஜாவை இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட அனைவரும் பெருமளவில் பாராட்டி வருகிறார். இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக ஜடேஜா உருவெடுத்துள்ளார்.

jadeja

இந்நிலையில் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் குறித்து இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் ஜடேஜா பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய ஜடேஜா “ எங்கள் அணியில் அனைவரும் சிறந்த பார்மில் உள்ளார்கள். பேட்ஸ்மங்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து ரன்கள் குவித்து வருகின்றனர். அதேபோல் பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். இதன் மூலம் இந்திய வீரர்கள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

jadeja 1

அதுமட்டுமின்றி இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெல்வது மட்டும் தான் எங்களது தற்போதைய முக்கிய இலக்காக இருக்கிறது” என்று இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா கூறியுள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பியதால் இந்திய அணி எவ்வாறு விளையாடும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement