இன்னும் 8 விக்கெட் தான் தேவை.. உலகிலேயே 3 ஆவது வீரராக ரவீந்திர ஜடேஜா – நிகழ்த்தவிருக்கும் சாதனை

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அதன்பிறகு ஹாட்ரிக் வெற்றியை சந்தித்து இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் மார்ச் 7-ம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்திய அணி முனைப்பு காட்டும்.

- Advertisement -

அதேவேளையில் இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று நாடு திரும்ப ஆறுதல் வெற்றியை தேடி தீவிரத்துடன் விளையாட விரும்பும். இதன் காரணமாக இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா 71 போட்டிகளில் விளையாடிய 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் ஐந்தாவது போட்டியில் அவர் மேலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் டெரக் அண்டர்வுட்டை(297) பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடிப்பார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றியால் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள உயர்வு – டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் இதோ

மேலும் ஒருவேளை அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ரங்கனா ஹெராத் மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோருக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இடதுகை சுழற்பந்து வீச்சாளராக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது உலக அளவிலான வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement