கபில் தேவிற்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா நிகழ்த்தவிருக்கும் சாதனை – விவரம் இதோ

Jadeja and Kapil Dev
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் கொல்கத்தா சென்றடைந்து தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவீந்திர ஜடேஜா நிகழ்த்தவிருக்கும் அசத்தல் சாதனை :

உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணி அவர்களை வீழ்த்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் சில நட்சத்திர இந்திய வீரர்கள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பிட்ட சில முக்கிய சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் ஒரு முக்கிய சாதனை ஒன்றினை படைக்க காத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவிற்கு அடுத்து அவர் மாபெரும் வரலாற்று சாதனையை டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்த காத்திருக்கிறார்.

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 27 அரைசதம் என 3990 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் மேலும் 10 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை பூர்த்தி செய்வார். அதோடு 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 338 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கும் வேளையில் மேலும் 12 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் 350 விக்கெட்டுகளை எடுப்பார்.

இதையும் படிங்க : இது ஒன்னும் அவ்ளோ ஈஸி கிடையாது.. கடவுளுக்கு நன்றி.. காயத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து – ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

இப்படி 350 விக்கெட்டுகள் மற்றும் 4000 ரன்களை அவர் எடுக்கும் பட்சத்தில் கபில் தேவுக்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரராக 4000 ரன்கள் மற்றும் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement