CSKvsPBKS : ராயுடு சூப்பரா ஆடுனாரு. ஆனா நாங்க பண்ண தப்பு இதுதான் – தோல்விக்கு பிறகு ஜடேஜா வருத்தம்

Jadeja
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே இதுவரை நடைபெற்று முடிந்துள்ள தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்ததால் நேற்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமான ஆட்டமாக பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

CSKvsPBKS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது தவான் மற்றும் ராஜபக்சே ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தவான் 88 ரன்களையும், ராஜபக்சே 42 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 176 ரன்களை மட்டுமே குவித்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் சென்னை அணிக்காக அம்பத்தி ராயுடு மட்டும் ஒருபுறம் 39 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரி என 78 ரன்களை குவிக்க மற்ற எந்த வீரர்களும் பெரிய அளவு ரன்களை குவிக்காததால் சென்னை அணியால் இலக்கினை எட்ட முடியாமல் போனது. இந்த போட்டியில் அடைந்த தோல்வி மூலம் தற்போது 8 போட்டிகளில் விளையாடி சென்னை அணியானது வெறும் நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழக்கும் நிலையில் உள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா கூறுகையில் : இந்த போட்டியை நாங்கள் சிறப்பாகவே துவங்கினோம் என்று நினைக்கிறேன். ஆனாலும் பந்து வீச்சின் போது இறுதியில் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டோம். அதுமட்டுமின்றி பந்துவீச்சின் போது நாங்கள் செயல்படுத்த நினைத்த திட்டங்கள் அனைத்தும் தவறாகிப் போனது.

- Advertisement -

ராயுடு பேட்டிங்கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் எங்களால் இலக்கை எட்ட முடியாமல் போனது அதற்கு காரணம் நாங்கள் பந்துவீச்சின் போது 10 முதல் 15 ரன்கள் வரை அதிகமாக விட்டு கொடுத்ததும், சேசிங்கின் போது முதல் 6 ஓவரில் சரியான தொடக்கம் கிடைக்காமல் போனதும் தான் என்று ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ரிஷி தவான் இந்த வித்தியாசமான கந்தசாமி மாஸ்க் அணிந்து விளையாட இதுதான் காரணமாம் – சுவாரசிய தகவல் இதோ

மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஏற்கனவே தாங்கள் விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள மும்பை அணியானது புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது மட்டுமின்றி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது என்று கூறலாம். அவர்களை தொடர்ந்து தற்போது சென்னை அணியானது 4 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement