நான் பேட்டிங் இறங்கும்போது இதை மட்டுமே நினைத்து களமிறங்கினேன் – ஆட்டநாயகன் ஜடேஜா ஓபன் டாக்

Jadeja 1

ஐபிஎல் தொடரின் 29 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான தன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

cskvssrh

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், ராயுடு 41 ரன்களும் குவித்தனர். துவக்க வீரராக களமிறங்கிய சாம் கரன் 31 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி சார்பாக வில்லியம்சன் மட்டும் சிறப்பாக விளையாடி 57 ரன்களை குவித்தார். ஜடேஜா பேட்டிங்கில் 10 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் குவித்தார். பவுலிங்கிலும் 3 ஓவர் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அதனால் அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா கூறுகையில் : இந்தப் போட்டியில் நான் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் எனது பங்களிப்பை கொடுப்பதில் மகிழ்ச்சி. நான் பேட்டிங்கில் கிளம்பியதும் எந்தவித பிளானும் இன்றி பந்துகளை பலமாக அடிக்கவே விரும்பினேன். மைதானம் ஸ்லோவாக இருந்ததால் பந்து வீசும் பொழுது ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசினேன்.

- Advertisement -

Jadeja 2

அப்படி வீசும் பொழுது அது கடினமாக இருக்கும் என்றும் கருதினேன். அதேபோன்று பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது. பீல்டிங்கும் இந்த போட்டியில் நான் சிறப்பாக செய்தேன். எப்பொழுதும் அணிக்காக ஒரு நல்ல கேட்ச் அல்லது ஒரு ரன்னில் ரன் அவுட் எடுக்க வேண்டும் என்றும் நான் எதிர்பார்த்து விளையாடி வருகிறேன் என்று ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.