IND vs AUS : எனக்கு எதிரா இந்த ஷாட் மட்டும் விளையாடாதீங்க. ஆஸி வீரர்களை எச்சரித்த – ஆட்டநாயகன் ஜடேஜா பேட்டி

Ravindra-Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பினையும் இந்திய அணி பிரகாசப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற ஜடேஜாவே இந்த டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜடேஜா பேட்டிங்கிலும் 26 ரன்களை குவித்து இருந்தார்.

- Advertisement -

அதோடு ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது மொத்தமாக அவர்களை முடக்கிய ஜடேஜா 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்படி இந்த போட்டியில் 10 விக்கெட்டுகளை ஜடேஜா கைப்பற்றியதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசியது குறித்தும், ஏழு விக்கெட்டை வீழ்த்தியது குறித்தும் பேசியிருந்த ஜடேஜா கூறுகையில் :

Jadeja

நான் என்னுடைய பந்துவீச்சை மிகவும் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி வருகிறேன். இதுபோன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த மைதானத்தில் பந்து நன்றாக ஸ்பின் ஆனது. அதேநேரத்தில் கொஞ்சம் தாழ்வாகவும் சென்றது. எனவே எனக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்வீப் ஷாட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆகியவற்றை முயற்சித்தார்கள்.

- Advertisement -

எனவே என்னுடைய திட்டத்தை நான் மிகவும் சிம்பிளாக வைத்துக் கொண்டேன். பந்தை ஸ்டம்புக்கு நேராக வீச வேண்டும் என்பது மட்டும்தான் அந்தத் திட்டம். அதேவேளையில் அவர்கள் என்னுடைய பந்துக்கு எதிராக ரன்களை குவித்தாலும் நான் திட்டத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டேன். எனவே ஸ்டம்பை நோக்கி மட்டுமே பந்து வீசினேன். அவர்கள் சிறிய தவறு செய்தால் கூட நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும் என்பது எனக்கு தெரியும்.

இதையும் படிங்க : IND vs AUS : 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக திடீரென நாடு திரும்பிய ஆஸி கேப்டன் பட் கமின்ஸ் – காரணம் என்ன

அந்தவகையில் எனக்கு 7 விக்கெட்டுகளும் கிடைத்தது. மேலும் இறுதியில் பேசிய ஜடேஜா கூறுகையில் : எனக்கு எதிராக ஸ்வீப் ஷாட் ஆப்ஷனை மட்டும் கையில் எடுக்காதீர்கள். அது நல்ல முடிவு கிடையாது. இது போன்ற மைதானங்களில் நீங்கள் எனக்கு எதிராக ஸ்வீப் ஷாட் விளையாட நினைத்தால் அது சரியான முடிவு கிடையாது என்று சிரித்துக் கொண்டே ஜடேஜா ஆஸ்திரேலிய வீரர்களை எச்சரிக்கும் பாணியில் பேசிவிட்டு நகர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement