- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி மற்றும் கபில் தேவின் சாதனையை முறியடித்த ஜடேஜா. என்ன சாதனை தெரியுமா ? – விவரம் இதோ – INDvsNZ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் குப்தில் 79 ரன்களும், டைலர் 73 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜடேஜா 55 ரன்களையும், ஐயர் 52 ரன்களையும் அடித்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் பின்வரிசை வீரரான ஜடேஜா சிறப்பாக இறுதிவரை அணியின் வெற்றிக்காக போராடி 49 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். மொத்தம் 73 பந்துகளை சந்தித்த ஜடேஜா 55 ரன்களை அடித்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். மேலும் கடைசி கட்டத்தில் போராடிய ஜடேஜா மற்றும் சைனி ஆகியோர் 8 ஆவது விக்கெட்டுக்கு 76 ரன்களை பாட்னர்ஷிப்பாக அமைத்தனர்.

இந்த போட்டியில் ஜடேஜா அடித்த 55 ரன்கள் மூலம் தோனி மற்றும் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார். அந்த சாதனை யாதெனில் 7 ஆவது வீரராக களமிறங்கிய ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 7 ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். இதற்கு முன்னர் தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோர் 7 ஆவது இடத்தில் களமிறங்கி 6 அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by