இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது 10 ஓவர்களை வீசிய பின்னர் விராட் கோலியை கட்டியணைத்து சிறிது நேரம் இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்பதனாலே விராத் கோலி அவரை வாழ்த்தி இருக்கிறார் என்று பேசத் தொடங்கினர்.
ஓய்வு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவீந்திர ஜடேஜா :
ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தான் ஓய்வு முடிவினை அறிவிக்கும் முன்னதாக விராட் கோலியை கட்டியணைத்தார். அப்போது விராட் கோலி தான் முதல் நபராக அஷ்வினின் ஓய்வு முடிவுக்கு அவரை வாழ்த்தியிருந்தார். அதன் பின்னரே அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக விராட் கோலியை கட்டியணைத்து தனது முடிவை கூறியிருக்கிறார். அவருக்கு பாராட்டினை தெரிவித்து விராட் கோலி வழி அனுப்பினார்.
அந்த வகையில் ரவீந்திர ஜடேஜாவும் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலியை கட்டி அணைத்ததால் அவரும் ஓய்வை அறிவிக்க போகிறார் என்ற சந்தேகம் ரசிகர்கள் பலரது மத்தயிலும் எழுந்தது. மேலும் ரவீந்திர ஜடேஜாவின் ஓய்வு குறித்து பல்வேறு செய்திகளும் வைரலாக பரவின.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஒரு பதிவினை பகிர்ந்து தனது ஓய் முடிவு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்த வகையில் ரவிந்திர ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ள ஸ்டோரி ஒன்றில் : “தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.. நன்றி” என பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : 2024 தோல்விகளை மறக்காதீங்க.. பாகிஸ்தானில் ஆடிருந்தாலும் இந்தியா ஜெய்ச்சுருப்பாங்க.. வாசிம் அக்ரம் பாராட்டு
அவரது இந்த பகிர்வின் மூலம் தற்போதைக்கு ரவிந்திர ஜடேஜா ஓய்வு பெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 204 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2806 ரன்களையும், 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



