2024 தோல்விகளை மறக்காதீங்க.. பாகிஸ்தானில் ஆடிருந்தாலும் இந்தியா ஜெய்ச்சுருப்பாங்க.. வாசிம் அக்ரம் பாராட்டு

Wasim Akram
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது. அதனால் 2002, 2013க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற இந்தத் தொடரில் இந்தியா தங்களது போட்டிகளை பாதுகாப்பு காரணங்களால் துபாயில் விளையாடியது.

அந்த அறிவிப்பு வெளியான போது யாருமே இந்திய அணியை பற்றி விமர்சிக்கவில்லை. ஆனால் முதல் 2 போட்டிகளில் வென்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றதும் ஒரே ஹோட்டலில் தங்கி ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாத இந்தியா களத்தில் கண்ணாக செயல்பட்டு மூன்றாவது கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

- Advertisement -

பாகிஸ்தானிலும் வெற்றி:

இந்நிலையில் பாகிஸ்தான் மட்டுமின்றி எங்கு விளையாடியிருந்தாலும் இந்தியா கோப்பையை வென்றிருக்கும் என்று அந்நாட்டின் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இந்தியா வென்றதாக அவர் பாராட்டியுள்ளார். இது போக 2024இல் நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து இந்தியா வென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “இதை இந்திய அணி உலகின் எந்த இடத்திலும் வென்றிருப்பார்கள். ஆம் அவர்கள் துபாயில் விளையாடியது பற்றி நிறைய பேச்சுக்கள் காணப்பட்டன. ஆனால் அது ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது. பாகிஸ்தானிலும் அவர்கள் வெற்றிகளைப் பெற்றிருப்பார்கள். 2024 டி20 உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றதைப் போலவே சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளார்கள்”

- Advertisement -

ஜாம்பவான் பாராட்டு:

“இது இந்திய கிரிக்கெட்டின் ஆழம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றைக் காட்டுகிறது. 3 – 0 என்ற கணக்கில் சொந்த ஊரில் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரில் அவர்கள் தோற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதற்கு முன்பாக இலங்கையில் ஒருநாள் தொடரில் தோற்ற அவர்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் தோற்றார்கள். அதனால் கேப்டன், பயிற்சியாளர் நீக்கப்பட வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன”

இதையும் படிங்க: நாக்கை அடக்குங்க.. பாகிஸ்தானுக்கு பயந்து ஷார்ஜாவுக்கு ஓடிய கவாஸ்கர் பேசலாமா? இன்சமாம் விளாசல்.. நடந்தது என்ன?

“ஆனால் அவர்கள் எங்களுடைய கேப்டன், எங்கள் பயிற்சியாளர் என்று சொல்லி பிசிசிஐ ஆதரவு கொடுத்தது. அந்த ஆதரவைப் பயன்படுத்தி இந்தியா சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது” என்று கூறியுள்ளனர். அந்த வகையில் தங்களை விமர்சித்தவர்களுக்கு இந்திய அணி செயலால் பதிலடி கொடுத்து சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement