டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் புதிய உச்சம் தோட்ட ரவீந்திர ஜடேஜா – அசத்தல் சாதனை

Jadeja
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2012-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 80 போட்டிகளில் விளையாடி 4 சதம், 22 அரைசதம் என 3370 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி பந்து வீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் இதுவரை 323 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா நிகழ்த்திய வரலாற்று சாதனை :

இடதுகை சுழற்பந்து பந்துவீச்சாளராக 200 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் முன்னணி வீரராக திகழ்ந்து வந்த அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் முக்கிய வீரராக இடம் பெற்றிருந்தார். மேலும் அடுத்ததாக இந்திய அணி விளையாட இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவர் இந்திய அணியின் மூத்த வீரராக விளையாட உள்ளார்.

ஏற்கனவே ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் இருந்து ஓய்வுபெற்ற வேளையில் ரவீந்திர ஜடேஜா தான் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த வீரராக இந்திய அணியில் நீடிக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் படைத்துள்ள புதிய வரலாற்று சாதனை குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 400 புள்ளிகளுடன் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார்.

இதையும் படிங்க : அந்த 2ம் என்னோட அம்மா, அப்பா.. பிசிசிஐ அலுவலகத்தில் கிடைத்த மெகா கெளரவம்.. கவாஸ்கர் நெகிழ்ச்சி

அதிலும் குறிப்பாக 1151 நாட்கள் தொடர்ச்சியாக நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கும் அவர் நீண்ட நாட்கள் முதலிடத்தில் இருந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தி வரும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement