இந்த ஆண்டு சி.எஸ்.கே அணி வெற்றிகளை குவித்து தள்ள இதுவே காரணம் – ரகசியத்தை உடைத்த ஜடேஜா

Jadeja

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடியது. 14 போட்டிகளைக் கொண்ட தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் சென்ற ஆண்டு புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் மோசமாக விளையாடிய தொடர் சென்ற ஆண்டு தான். எனவே இந்த ஆண்டும் மிக சிறப்பாக விளையாடி மீண்டும் ஒரு முறை கோப்பையை கைப்பற்றும் வண்ணம் விளையாடப் போவதாக தொடர் துவங்கும் முன் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியிருந்தார்.

CSK

அவர் கூறியதைப் போல் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் டெல்லி அணியுடன் தோல்வி பெற்றிருந்தாலும் அதற்கு அடுத்த 5 போட்டிகளிலும் தொடர் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் தற்போது உள்ளது.
சமீபத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில் மும்பை அணி இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருப்பினும் தொடர்ந்து முதல்பாதியில் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் இரண்டாவது இடத்தில் தான் தற்போது உள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சென்னை அணியின் வெற்றி ரகசியம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Jadeja

இந்த ஆண்டு எங்கள் அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் மிகவும் பொறுப்புடன் விளையாடுகின்றனர். அவர்களுடைய பங்களிப்பு சிறிதோ பெரிதோ தங்களால் முடிந்த வரை அனைவரும் பங்களித்து வருகின்றனர். ஒரு அணியாக அனைவரும் இணைந்து செயல்படும்போது வெற்றி நமக்கு பரிசாக கிடைக்கும். அப்படி தான் எங்களுக்கு தற்பொழுது வரை வெற்றிகள் கிடைத்து உள்ளது. அதேபோன்று பேட்ஸ்மேன்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

- Advertisement -

ruturaj

மேலும் பேசிய ஜடேஜா ஒரு அணிக்காக நாங்கள் எந்தவித வியூகம் முன்னரே அமைக்க மாட்டோம்.எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்பதை கணக்கில் நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை. எதிரே எந்த அணி விளையாடினாலும் அந்த நாளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெறச் செய்வதே எங்களுடைய முழு நோக்கம். இதற்கென தனியாக நாங்கள் எந்தவித பயிற்சியும் இந்த ஆண்டு தொடரில் மேற்கொள்ளவில்லை என்று இறுதியாக ரவீந்திர ஜடேஜா கூறி முடித்தார்.