அவரே கூட இருக்கும்போது கவலை எதற்கு? – சென்னையின் புதிய கேப்டன் ஜடேஜா கூறியது இதோ

MS Dhoni Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் வரும் மே 29-ஆம் தேதி வரை ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

விடைபெற்ற எம்எஸ் தோனி :
இந்த தொடர் தூங்குவதற்கு இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் முதல் போட்டியில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த நட்சத்திரம் எம்எஸ் தோனி திடீரென அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். தற்போது 40 வயதை கடந்துவிட்ட அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த பல வருடங்களாக முன்னின்று வழிநடத்திய சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மற்றொரு நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது போது சென்னை அணிக்காக கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். இதுவரை மொத்தம் 12 சீசன்களில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் அதில் 11 சீசன்களில் பிளே-ஆப் சுற்றுக்கு சென்னை அணியை தகுதி பெற வைத்து 9 முறை இறுதிப் போட்டிகளில் தலைமையேற்று விளையாட வைத்துள்ளார்.

அதில் 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் 4 கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்து 2-வது வெற்றிகரமான அணியாக சென்னையை ஜொலிக்க வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

தவிர்க்க முடியாத கேப்டன்:
ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் இன்று வரை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த எம்எஸ் தோனி அந்த அணிக்காக பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து சென்னை அணியின் ரத்தமும் சதையுமாக கலந்த இதயமாக கருதப்படுகிறார். அப்படிப்பட்ட அவரை சென்னை மற்றும் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் “தல” என அழைத்து தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அவ்வளவு அன்பு மிகுந்த தமிழக மக்கள் மீது பாசம் வைத்துள்ள அவரும் ராஞ்சிக்கு பின் சென்னை தான் தனது 2-வது வீடு என பலமுறை வெளிப்படையாக பேசி தமிழ்நாட்டின் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தினார்.

அந்த அளவுக்கு சென்னை அணியில் தவிர்க்க முடியாத ஒருவராக கருதப்படும் எம்எஸ் தோனியின் இடத்தை நிரப்ப எவராலும் முடியாது என்றே கூறலாம். இருப்பினும் தற்போதைய நிலைமையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு பின் சென்னை அணியை வழிந்டத்தும் 3-வது கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

தல கூட இருக்காரு:
இதுவரை மொத்தம் 204 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட எம்எஸ் தோனி அதில் 121 வெற்றிகளை 59.60 என்ற வெற்றி சராசரி விகிதத்தில் குவித்துள்ளார். இதன் வாயிலாக போட்டிகள் மற்றும் வெற்றி சராசரி அடிப்படையில் 5 கோப்பைகளை வென்றுள்ள ரோஹித் சர்மாவை காட்டிலும் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை எம்எஸ் தோனி படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவரின் இடத்தில் அடுத்த கேப்டனாக செயல்பட்ட போகும் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஜாம்பவான்களும் வல்லுனர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றது பற்றிய ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக பேசியது பின்வருமாறு. “புதிய கேப்டனாக பொறுப்பேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. அதேசமயம் எம்எஸ் தோனி போன்ற ஒரு மகத்தான கேப்டனின் இடத்தை நிரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவர் சென்னை அணியில் ஒரு மிகப்பெரிய மரபை ஏற்படுத்தியுள்ளார். எனவே அவரின் இடத்தில் அவர் விட்டுச் சென்றுள்ள பணிகளை அவரைப்போலவே தொடர்வேன் என்று நம்புகிறேன். மேலும் தற்சமயம் நான் எதற்காகவும் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் எம்எஸ் தோனி என்னுடன் இருப்பதால் எனக்கு ஏதேனும் ஒரு உதவி தேவைப்பட்டால் உடனடியாக அவரிடம் சென்று கேட்பேன். இப்போதும் கூட அவர் என்னுடன் இங்கேதான் இருக்கிறார். எனவே இதைப் பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினாலும் ஜடேஜாவின் கீழ் முதல் முறையாக சென்னை அணியில் தோனி ஒரு சாதாரண வீரராக விளையாட உள்ளார். எனவே களத்தில் தன்னுடன் விளையாட இருக்கும் அவரிடம் எந்த சூழ்நிலையில் உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக தயங்காமல் கேட்டு சென்னையின் வெற்றிக்கு பாடுபடுவேன் என ரவிந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஜடேஜாவை சி.எஸ்.கே அணியின் கேப்டனாக மாற்ற கைகாட்டியதே அவர்தானாம் – வெளியான தகவல்

ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு இதே போல இந்தியாவின் கேப்டன் பதவியில் இருந்து விலகி விராட் கோலி தலைமையில் விளையாடிய எம்எஸ் தோனி அவருக்கு பல வருடங்களாக உதவியாக இருந்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். எனவே அதேபோல ஜடேஜாவுக்கும் அவர் உதவுவார் என்பதால் சென்னை ரசிகர்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளார்கள்.

Advertisement