உண்மையா டி20 தான் கஷ்டம்.. டெஸ்ட் கேப்டன்ஷிப் ரொம்ப ஈஸி.. காரணத்தை விளக்கிய ஜடேஜா

Ravindra Jadeja 3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற 3 வகையான வடிவங்களில் விளையாடப்படுகிறது. அதில் டெஸ்ட் போட்டிகள் இருப்பதிலேயே மிகவும் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் 5 நாட்கள் நடைபெறக்கூடிய டெஸ்ட் போட்டிகளில் நான்கரை நாட்கள் முன்னிலையில் இருந்தாலும் கடைசி சில மணி நேரங்களில் வெற்றியைப் பறி கொடுக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும்.

அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம், அரை சதம் போன்ற பெரிய ரன்கள் குவிப்பதற்கு மணிக் கணக்கில் பேட்டிங் செய்ய வேண்டும். அதே போல பவுலர்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கு கொஞ்சமும் ஓயாமல் பந்துகளை வீச வேண்டும். இவை அனைத்தையும் சரியாக நிர்வகித்து வெற்றியைப் பெற வேண்டுமெனில் அதற்கு கேப்டன் சிறப்பாக செயல்படுவது மிகவும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டெஸ்ட் கேப்டன்ஷிப் ஈஸி:

இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை டெஸ்ட் கேப்டன்ஷிப் இருப்பதிலேயே மிகவும் சுலபமானது என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். மேலும் டி20, ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருப்பது கடினமானது என்றும் ஜடேஜா கூறியுள்ளார். அதற்கான காரணங்கள் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் பவுலருக்கு தகுந்தார் போல் 2 – 3 ஃபீல்டர்களை மாற்றினால் போதும். பேட்ஸ்மேனுக்கு தகுந்தார் போல் மாற்ற வேண்டியதில்லை. அதனாலேயே டெஸ்ட் ஃபார்மெட்டில் கேப்டனாக செயல்படுவது வித்தியாசமான விஷயம் என்று நான் சொல்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் பவுலர் நல்ல ரிதத்தில் இருக்கிறாரா என்பதைப் பார்த்து பவுலிங் செய்ய வைக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும்”

- Advertisement -

டி20 தான் கஷ்டம்:

“எப்போது உங்களுடைய முதன்மை பவுலரை கொண்டு வர வேண்டும் என்பது முக்கியம். அது கொஞ்சம் கணக்கீடுகளைப் பொறுத்தது. ஆனால் அது ஐபிஎல் போன்ற டி20 ஃபார்மட்டில் கேப்டனுக்கு தேவைப்படாது. ஏனெனில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்திலும் வித்தியாசமான நிகழ்வு காத்திருக்கும். ஒரு பந்து பௌண்டரி அல்லது சிக்ஸர் சென்றால் அதற்காக நீங்கள் மாற்றத்தை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்”

இதையும் படிங்க: 2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி தான் ஜெய்க்கும்.. ஆட்டநாயகனும் காரணமும் இதான்.. வாட்சன் கணிப்பு

“அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படுவது குழப்பமான விஷயம் கிடையாது. நான் நிறைய கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். அவர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் சவாலாக இருந்ததைப் பார்த்ததில்லை. அழுத்தமே இல்லாதது போல் இருக்கும் டெஸ்ட் போட்டியில் திடீரென நீங்கள் பேட்டிங் வரிசையில் மாற்ற வேண்டும் அல்லது புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்கும் ஒரே சவால் என்னவெனில் பவுலரை எப்படி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement