இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ஃபார்முக்கு திரும்பி சதத்தை அடித்து 119 ரன்கள் குவித்தார். அவருடன் துணை கேப்டன் கில் 60, அக்ச படேல் 41, ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் அடித்து 44.3 ஓவரில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்கள். அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரையும் இந்தியா ஆரம்பத்திலேயே வென்றுள்ளது.
ரோஹித் வந்துட்டாரு:
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் நம்பிக்கையின் நட்சத்திரம் ரோஹித் சர்மா சமீபத்திய போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான ஃபார்மில் இருந்து வந்தார். அவருடைய சுமாரான ஆட்டம் இந்திய அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு வழியாக இந்தப் போட்டியில் சதத்தை அடித்த அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் இந்தியாவுக்கு பலமாக அமைந்துள்ளதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே 2 வருடம் கழித்து ஒருநாள் போட்டிகளில் விளையாடினாலும் உடனடியாக அசத்த காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ரவீந்திர ஜடேஜா பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் மீண்டு வருவதற்கு ஓரிரு இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்படும். சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான தொடருக்கு முன்பாக ரோகித் சர்மா சதத்தை அடித்தது எங்களுடைய அணிக்கு மிகப்பெரிய உத்வேகமாகும்”
ஜடேஜா அசத்த காரணம்:
“ரோகித் சர்மாவுக்கு தம்முடைய ஆட்டத்தில் எப்படி அசத்துவது என்பது தெரியும். எனவே ஃபார்முக்கு வருவதற்கு தனியாக எந்த விவாதங்களும் நாங்கள் நடத்தவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது நிறைய ஓவர்கள் வீசி ரிதத்தை பெறுவதற்கு எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து நான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன்”
இதையும் படிங்க: நாங்க வேணும்னா நன்கொடை செய்யவா? ரச்சின் காயத்தால் இந்தியாவை கலாய்க்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்
“அந்த வாய்ப்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தும் அதே லைன், லென்த் ஆகியவற்றை தான் இங்கேயும் பயன்படுத்துகிறேன்” என்று கூறினார். அந்த வகையில் ரோஹித் மட்டுமின்றி ஜடேஜாவும் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பலமாகும். ஏனெனில் அவர் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல தங்கப்பந்து விருது வென்று முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.



