நாங்க வேணும்னா நன்கொடை செய்யவா? ரச்சின் காயத்தால் இந்தியாவை கலாய்க்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்

Cuttack ODI
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரையும் ஆரம்பத்திலேயே இந்தியா வென்றுள்ளது. அதன் காரணமாக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது என்றே சொல்லலாம்.

முன்னதாக அந்தப் போட்டியில் 305 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா – கில் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை துவங்கினார்கள். அப்போது 6வது ஓவரின் முடிவில் மைதானத்தில் இருந்த ராட்சத மின்விளக்குகளில் ஒரு விளக்கு பழுதானதால் போட்டி நிறுத்தப்பட்டது. ஒன்றுக்கு 2 முறை பழுது ஏற்பட்டதால் ஆட்டம் 20 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்தது.

- Advertisement -

தாமதமான ஆட்டம்:

அதற்கு அந்த குறிப்பிட்ட மின்விளக்கில் இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் தற்காலிகமாக பழுதானதே காரணம் என்று ஒடிசா மாநில வாரியத்தின் தலைவர் பங்கஜ் மொஹண்டி தெரிவித்தார். அது உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் கூறிய அவர் வருங்காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். அதற்கு ஒடிசா மாநில அரசின் உதவியையும் எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அதைப் பார்த்த சில பாகிஸ்தான் ரசிகர்கள் உலகின் பணக்கார வாரியமான பிசிசிஐக்கு என்ன ஆயிற்று? என்று சமூகவலைகளில் கிண்டலடித்தார்கள். குறிப்பாக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மைதானத்தில் மின்விளக்குகள் மற்றும் ஜெனரேட்டர்களை பராமரிக்க முடியாத அளவுக்கு பணம் இல்லையா? என்று அவர்கள் கலாய்க்கிறார்கள். மேலும் பிப்ரவரி 8ஆம் தேதி நாகூரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இளம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கேட்ச் பிடிக்கும் போது முகத்தில் காயமடைந்தார்.

- Advertisement -

கலாய்க்கும் பாகிஸ்தான்:

அதற்கு பாகிஸ்தான் வாரியம் லாகூர் மைதானத்தில் பொருத்தப்பட்ட புதிய மின்விளக்குகளே காரணம் என்று முன்னாள் கேப்டன் ரசித் லத்தீப் விமர்சித்தார். அத்துடன் சீனாவிலிருந்து இறகுமதி செய்யப்பட்ட தரமற்ற மின்விளக்குகளே காரணம் என்று இந்திய ரசிகர்கள் விமர்சித்தனர். எனவே விரைவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானிலிருந்து மாற்றி துபாயில் நடத்த வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: இதை செஞ்சுருந்தா இந்தியாவை வீழ்த்திருப்போம்.. ஆனா ரோஹித் வெற்றியை பறிச்சுட்டாரு.. ஜோஸ் பட்லர்

தற்போது உங்களுக்கு வேண்டுமானால் பாகிஸ்தான் வாரியம் நன்கொடை தரும். மின்விளக்குகளை சரி செய்யுங்கள் என்று பிசிசிஐயை பாகிஸ்தான் ரசிகர்கள் ட்விட்டரில் கிண்டலடித்து வருகிறார்கள். இதற்கு முன் மழை பெய்த போதிய வசதிகள் இல்லாமல் போட்டி தாமதமான போது இதே போல பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவை கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement