10 வருட கனவு.. இதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னு சொன்னாங்க.. அதையும் தாண்டி சாதிச்சுட்டேன்.. ஜடேஜா பேட்டி

Ravindra Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 107* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 285-9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. குறிப்பாக மழையால் 2, 3வது நாள் ஆட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதால் மீதமுள்ள நாட்களில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா அதிரடியாக விளையாடியது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை அடித்த அணி என்ற உலக சாதனைகளையும் இந்தியா படைத்தது.

- Advertisement -

ஜடேஜா 300 விக்கெட்ஸ்:

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72, கேப்டன் ரோஹித் 23, சுப்மன் கில் 39, விராட் க்களி 47, ராகுல் 68 ரன்கள் எடுத்தனர். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹாசன், ஷாகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் விளையாடும் வங்கதேசம் 4வது நாள் முடிவில் 26-2 எனத் தடுமாறி வருகிறது. ஜாகிர் ஹசன் 10, ஹசன் மஹ்முத் 4 ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டான அந்த அணிக்கு சாதமன் இஸ்லாம் 7*, மோனிமுல் ஹைக் 0* ரன்களுடன் உள்ளனர்.

முன்னதாக இப்போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய இடது கை ஸ்பின்னர் என்ற சாதனையை ஜடேஜா படைத்தார். மேலும் ஜாம்பவான் கபில் தேவை முந்தி வேகமாக 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்தார். ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று சந்தித்த விமர்சனங்களை தாண்டி தற்போது சாதித்தது பற்றி ஜடேஜா பேசியது பின்வருமாறு.

- Advertisement -

10 வருட கனவு:

“300 விக்கெட்டுகள் எடுத்தது ஸ்பெஷல். 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாடி வருகிறேன். ஒரு வழியாக இந்த சாதனையை தொட்டுள்ளேன். இதற்காக பெருமைப்படுகிறேன். இந்திய ஜெர்ஸியை அணிந்து விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும். ஒரு இளம் வீரராக நான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கினேன். அப்போது நான் வெள்ளைப் பந்து ஸ்பெசலிஸ்டாக மட்டுமே இருப்பேன் என்று பலரும் சொன்னார்கள்”

இதையும் படிங்க: வங்கதேசம் 26/2.. ஜஹீர் கானை முந்திய அஸ்வின் வரலாற்று சாதனை.. ட்ராவை தள்ளி இந்தியா வெல்லுமா?

“அங்கிருந்து சீராக என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றினேன். அது கடந்த சில வருடங்களாக நல்ல பலனை கொடுக்கிறது. பேட்டிங் செய்ய செல்லும் போது எனக்கு நானே கொஞ்சம் நேரம் கொடுத்து சூழ்நிலையை புரிந்து விளையாடப் பார்க்கிறேன். பந்துக்கு தகுந்தாற் போல் ரியாக்சன் கொடுத்து ஷாட்டுகளை அடிக்கிறேன். இப்போட்டியில் வகுத்த திட்டத்திற்கு தகுந்தார் போல் நாங்கள் பேட்டிங் செய்துள்ளோம். வங்கதேசத்தை விரைவாக அவுட் செய்வோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement