வங்கதேசத்துக்கு எதிராக கான்பூரில் இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கியது. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் முதல் நாளில் வங்கதேசம் 107-3 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 2 நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 4வது நாளில் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வங்கதேசத்தை 232 ரன்களுக்கு சுருட்டியது.
அதிகபட்சமாக மோனிமுள் ஹைக் 107* ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா எஞ்சிய ஒன்றரை நாளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிரடியாக விளையாடியது.
இந்தியா வெல்லுமா:
அதற்காக வங்கதேசத்தை டி20 போல அடித்து நொறுக்கிய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்கள் குவித்த அணியாக உலக சாதனைகளையும் படைத்தது. அந்த வகையில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்திய அணி 285-9 ரன்கள் குவித்து தங்களுடைய ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72, கேஎல் ராகுல் 68, விராட் கோலி 47, சுப்மன் கில் 39, ரோஹித் சர்மா 23 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 4, ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் 4வது நாள் முடிவில் 26-2 என தடுமாறி வருகிறது. அந்த அணிக்கு ஜாகிர் ஹசன் 10, ஹசன் மஹ்முத் 4 ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டான நிலையில் களத்தில் சாதமன் இஸ்லாம் 7*, மோனிமுல் ஹைக் 0* ரன்களுடன் உள்ளனர்.
அஸ்வின் சாதனை:
தற்போதைய நிலையில் 26 ரன்கள் முன்னிலை வகிக்கும் இந்தியா 5வது நாளில் வேகமாக வங்கதேசத்தை ஆல் அவுட்டாக்க முயற்சிக்கவுள்ளது. குறிப்பாக 150 ரன்களுக்குள் வங்கதேசத்தை சுருட்டினால் இந்தியா வெற்றி பெற பிரகாச வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் மூன்றாவது நாள் முடிவில் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியை இந்தியா வெற்றியை நோக்கி இழுத்துக் கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: 285 ரன்ஸ்.. அரை நாளில் இந்தியா 5 உலக சாதனை.. வங்கதேசத்தை துவம்சம் செய்து.. ஆஸி, இங்கிலாந்தை முந்தி வரலாறு
குறிப்பாக 4வது நாளில் சரவெடியாக பேட்டிங் செய்த விதத்தை வைத்து 5வது நாளிலும் வங்கதேசத்தை தெறிக்க விட்டு இந்தியாவை வெல்லும் என்று நம்பலாம். இப்போட்டியில் இதுவரை மொத்தம் எடுத்துள்ள 4* விக்கெட்டுகளை சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின்: 33*
2. ஜஹீர் கான்: 31
3. இஷாந்த் சர்மா: 25



