இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. அப்போட்டியின் முதல் நாளில் வங்கதேசம் 107-3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. அடுத்த 2 நாட்கள் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நான்காவது நாள் ஆட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.
அதில் தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 107*, கேப்டன் சாண்டோ 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய மீதமுள்ள ஒன்றரை நாளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மிரட்டலாக பேட்டிங் செய்த துவங்கியது.
மிரட்டிய இந்தியா:
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டினர். அந்த வகையில் 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர்களில் ரோஹித் சர்மா 23 (11), ஜெய்ஸ்வால் 12 பவுண்டரி 2 சிக்ஸருடன் 72 (51) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அவரைத் தொடர்ந்து மிடில் ஆடரில் சுப்மன் கில் 39 (36), விராட் கோலி 47 (35), கேஎல் ராகுல் 68 (43) ரன்களை அதிரடியாக எடுத்தனர்.
அதனால் இந்தியா 285/9 ரன்களில் தங்களுடைய ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. வங்கதேசத்திற்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 4, ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக இப்போட்டியில் 4வது நாள் உணவு இடைவெளிக்கு முன் களமிறங்கிய இந்தியா மாலை 4.30 மணிக்கெல்லாம் டிக்ளேர் செய்து 285-9 ரன்கள் குவித்தது.
அந்த அரை நாள் ஆட்டத்திற்குள் 18 பந்துகளில் 50 ரன்கள் குவித்த இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 50 ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2024 நாட்டிங்காம் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இங்கிலாந்து 4.2 ஓவரில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அதே வேகத்தில் விளையாடிய இந்தியா 10.1, 18.2 ஓவர்களில் முறையே 100, 150 ரன்கள் தொட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100, 150 ரன்கள் குவித்த அணியாக தங்களது சொந்த சாதனையை உடைத்து புதிய 2 உலக சாதனை படைத்தது.
அரை நாளில் 5 உலக சாதனை:
இதற்கு முன் 2023 போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 12.2, 21.1 ஓவர்களில் இந்தியா 100 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அதே வேகத்தில் விளையாடிய இந்தியா 24.4 ஓவரில் 200 ரன்கள் தொட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 200 ரன்களை அடித்த அணியாக 4வது உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2017இல் சிட்னியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 28.1 ஓவரில் 200 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க:
அப்போதும் ஓயாமல் வெளுத்து வாங்கிய இந்தியா 30.3 ஓவரில் 250 ரன்களை தொட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 250 ரன்கள் குவித்த அணியாக 5வது உலக சாதனையை படைத்தது. இதற்கு முன் 2022இல் ராவில்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 34 ஓவரில் 250 ரன்கள் நினைத்ததை முந்தைய சாதனையாகும்.



