அந்த சாதனை எனக்கே தெரியாது.. 86/4லிருந்து மீண்டு வர இந்தியா இதை செய்யும்.. ஜடேஜா பேட்டி

Ravindra Jadeja 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றுள்ளது. அந்த நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் மூன்றாவது போட்டி துவங்கியது. அதில் ஒயிட் வாஷ் தோல்வியை இருக்கும் முனைப்புடன் விளையாடும் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 235 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக வில் எங் 71, டேரில் மிட்சேல் 82 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் விளையாடும் இந்தியா முதல் நாள் முடிவில் 86-4 ரன்கள் எடுத்தனர். ரோஹித் சர்மா 18, விராட் கோலி 4, ஜெய்ஸ்வால் 30 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த இந்திய அணிக்கு களத்தில் கில், ரிஷப் பண்ட் உள்ளனர்.

- Advertisement -

ஜடேஜாவின் சாதனை:

அந்த வகையில் இந்த போட்டியில் இந்தியா தடுமாற்றமான துவக்கத்தை பெற்றுள்ளது ரசிகர்களுக்கு கவலையை கொடுத்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து இந்தியாவுக்காக 5வது அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்தார். குறிப்பாக ஜாகிர் கான் மற்றும் இஷாந்த் சர்மா (தலா 311) ஆகியோரை முந்தி 314 விக்கெட்டுகளை எடுத்து ஜடேஜா இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த சாதனையைப் பற்றி தாம் அறியவில்லை என்று தெரிவிக்கும் ஜடேஜா முதல் நாள் மாலையில் இந்தியா கொஞ்சம் பேட்டிங்கை சரிவை சந்தித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதை பார்ட்னர்ஷிப் அமைத்து சரி செய்வோம் என்று தெரிவிக்கும் ஜடேஜா இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் எடுப்பது எப்போதும் ஸ்பெஷல்”

- Advertisement -

இந்தியா திரும்பி வரும்:

“என்னுடைய அணிக்காக விக்கெட்டுகளை எடுத்து உதவியது நல்ல உணர்வை கொடுக்கிறது. வெயிலில் பந்து வீசுவது எளிதாக இல்லை. வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசினார். அனைவரும் தங்களுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்ததாக பேட்டிங் துறையில் நாங்கள் அணியாக சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க: சிராஜ் எதுக்கு? அவரை அனுப்பிருக்கலாமே.. ரோஹித்தின் சுமாரான முடிவை விமர்சித்த சாஸ்திரி, சைமன் டௌல்

“இப்போட்டியில் படைத்த சாதனை பற்றி எனக்குத் தெரியாது. விளையாடாத நேரங்களில் மட்டுமே நான் சாதனைகளைப் பற்றி பார்ப்பேன். அந்த விக்கெட்களை எடுத்தது நல்லது. இங்கே நீங்கள் மெதுவாக பந்து வீச முடியாது. ஏனெனில் வேகம் இருக்கிறது ஆனால் பெரிய பவுன்ஸ் இல்லை. முதல் நாள் மாலையில் தவறான தொடர்பு மற்றும் மதிப்பீடு காரணமாக எதிர்பாராத சரிவு ஏற்பட்டது. இன்னும் 150 ரன்கள் பின்தங்கியுள்ள நாங்கள் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து 235 ரன்களை தாண்டுவோம் என்பதே போட்டியின் திட்டமாகும்” என்று கூறினார்.

Advertisement