நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்தது. அதைத் தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் போராடி 235 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 82, வில் எங் 71 ரன்கள் எடுத்தனர்.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 18 ரன்னில் பெவிலியன் சென்றார். அதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 30 ரன்கள் எடுத்திருந்த போது ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து அவுட்டானார்.
சிராஜ் எதுக்கு:
மறுபுறம் சுப்மன் கில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அடுத்ததாக விக்கெட்டுகள் இழப்பை தவிர்ப்பதற்காக இந்திய அணி நைட் வாட்ச்மேனாக முகமது சிராஜை களமிறக்கியது. ஆனால் அவரோ அஜாஸ் பட்டேல் வீசிய முதல் பந்தலேயே எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானதுடன் இந்தியாவின் ஒரு ரிவ்யூவையும் காலி செய்து விட்டு சென்றார். அடுத்ததாக வந்த விராட் கோலி தேவையின்றி ரன் அவுட்டாகி 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதனால் முதல் நாள் முடிவில் 86-4 என இந்தியா தடுமாற்றமான துவக்கத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் சிராஜுக்கு பதிலாக ஓரளவு பேட்டிங் தெரிந்த ரவிச்சந்திரன் அஸ்வினை கேப்டன் ரோஹித் சர்மா அனுப்பியிருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். இது பற்றி தற்போது தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
அஸ்வின் வந்துருக்கலாம்:
“அது போன்ற சூழ்நிலையில் அஸ்வின் போன்றவரை அவர்கள் அனுப்பியிருக்க வேண்டும். அவரை நீங்கள் நைட் வாட்ச்மேன் என்று அழைக்க முடியாது. அவர் அந்த சூழ்நிலையை சமாளிக்கும் திறன் கொண்டவர்” என்று கூறினார். அதே போல முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் அது பற்றி நேரலை விமர்சிப்பது பின்வருமாறு.
இதையும் படிங்க: விராட் கோலியை விட 2 கோடி அதிகம்.. ஐ.பி.எல் வரலாற்றில் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய – கிளாசன்
“அந்த சூழ்நிலையை ஆர்டர் பேட்ஸ்மேன் வேண்டும் அல்லது ஒரு பவுலர் வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அங்கே பேட்டிங் செய்பவர் ஒரு முழு நேர பேட்ஸ்மேனை பாதுகாத்து இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டும். அஸ்வின் செய்வார் என்பதை நான் முழுவதுமாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதை இந்திய அணி செய்யாதது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார்.



