IND vs AUS : அது ஒரு பந்து தான் நம்ம தோல்விக்கான காரணம், கூடவே மோசமான பேட்டிங் வேற – சுனில் கவாஸ்கர் காட்டம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட இந்தியா ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. இத்தொடரின் நடப்புச் சாம்பியனாக இருப்பதால் கோப்பையை முன்கூட்டியே தக்க வைத்த இந்தியா 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய 4 அடுத்தடுத்த பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும் சாதனை படைத்தது. அந்த நிலைமையில் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் கச்சிதமாக செயல்பட்டு 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்று பதிலடி கொடுத்துள்ளது.

அதனால் தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொண்டுள்ள அந்த அணி ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் முதலிரண்டு போட்டியில் பெற்ற வெற்றியால் பல தருணங்களில் அஜாக்கிரதையாக குறிப்பாக பேட்டிங்கில் மோசமாக செயல்பட்ட இந்தியா 109, 163 என இன்னிங்சிலும் 200 ரன்களை கூட எடுக்காமல் படு தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கும் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த நோ-பால்:
முன்னதாக இப்போட்டியில் 2வது நாளில் அஸ்வினை முன்கூட்டியே பந்து வீச அழைக்காதது, அக்சர் பட்டேலை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பாதது போன்ற சில குளறுபடிகள் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அதை விட முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட்டை 9 ரன்களில் அவுட்டாக்கிய ஜடேஜா அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேனை நோ-பாலில் டக் அவுட்டாக்கினார். அதை பயன்படுத்திய அவர் கவாஜாவுடன் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 31 ரன்கள் எடுத்ததே போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

பொதுவாக பவுலர்கள் குறிப்பாக ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்காமல் ரன்களை கொடுப்பது கூட பரவாயில்லை ஆனால் நோபால் வீசுவது மன்னிக்க முடியாத ஒன்றாகும். ஆனால் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இதே போல நோபாலில் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கி கோட்டை விட்ட ஜடேஜா இந்த 3 போட்டிகளில் மொத்தம் 8 நோபால்களை வீசியுள்ளார். அதில் லபுஸ்ஷேனை கோட்டை விட்ட நோ-பால் இந்தூரில் இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் பிட்ச் சுழல்கிறது என்று தெரிந்தும் முதல் இன்னிங்ஸில் 160 – 170 ரன்களை எடுக்காமல் சுமாராக செயல்பட்ட இந்திய பேட்ஸ்மேன்களும் மற்றொரு காரணமென்று விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போட்டியை திரும்பி பார்த்தால் அது தான் இந்தியாவின் தோல்விக்கு காரணமென்று சொல்வீர்கள். ஏனெனில் இந்தியா 109 ரன்களுக்கு அவுட்டான அந்த சமயத்தில் லபுஸ்ஷேன் கவாஜாவுடன் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். எனவே அது தான் இப்போட்டியின் திருப்பு முனையாகும். அந்த நோபால் தான் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. அதே போல் பேட்ஸ்மேன்களும் தங்களது திறமைக்கு நியாயமான செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை”

“குறிப்பாக இந்தியாவில் இது போன்ற பிட்ச்கள் இருக்கும் என்று தெரிந்தும் இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாரான ஷாட்களை அடித்து அவுட்டானார்கள். மேலும் முதலிரண்டு போட்டிகளில் இருந்த தன்னம்பிக்கை இப்போட்டியில் இந்திய வீரர்களிடம் காணப்படவில்லை. ரோகித் சர்மாவும் நாக்பூரில் சதமடித்த பின் அசத்தவில்லை. அவர்கள் பிட்ச்சில் இறங்கி அடிக்கவில்லை. மாறாக பிட்ச் அவர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு செயல்பட்டனர். குறிப்பாக இந்திய வீரர்களின் மனதில் இம்முறை பிட்ச் அதிகமாக விளையாடி விட்டது”

இதையும் படிங்க: IND vs AUS : அவரது திறமையை நம்பாம கெடுத்து விட்டிங்க, ரோஹித் சர்மாவை விளாசும் ஹர்பஜன் சிங் – விவரம் இதோ

“இப்போட்டியின் முதல் மணி நேரத்திலேயே பிட்ச் வேலை செய்ய துவங்கி விட்டது என்பதால் பெரிய ரன்களை அடிக்க முடியாது என்பது முன்கூட்டியே தெரிந்து விட்டது. ஆனால் அங்கே 160 – 170 ரன்கள் எடுத்திருந்தால் கூட வெற்றியில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்.

Advertisement