IND vs AUS : அவரது திறமையை நம்பாம கெடுத்து விட்டிங்க, ரோஹித் சர்மாவை விளாசும் ஹர்பஜன் சிங் – விவரம் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று கோப்பை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் முதல் நாளிலேயே சுழலத் துவங்கிய பிட்ச்சில் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தியா 109, 163 என 2 இன்னிங்சிலும் 200 ரன்களுக்குள் சுருண்டு 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் மிரட்டலாக செயல்பட்ட ஆஸ்திரேலியா நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டு ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.

Pujara

- Advertisement -

அதனால் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ள கடைசி போட்டியில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் 2வது நாளில் ரவிச்சந்திரன் அஸ்வினை முன்கூட்டியே பயன்படுத்தாதது, அக்சர் படேலை நல்ல ஃபார்மில் இருந்தும் 9வது இடத்தில் விளையாட வைத்தது போன்ற ரோகித் சர்மாவின் சுமாரான கேப்டன்ஷிப் தோல்விக்கு முக்கிய காரணமானது.

திறமையை நம்பல:
அதை விட 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கை விட்டாலும் புஜாரா வழக்கம் போல பொறுமையாக விளையாடி 59 ரன்கள் எடுத்து போராடினார். ஆனால் அப்போது ஃபீல்டர்கள் உள்ளே இருந்ததால் எஞ்சிய விக்கெட்கள் விழுவதற்குள் புஜாராவை சற்று அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்குமாறு இசான் கிசானிடம் கேப்டன் ரோகித் சர்மா சொல்லி அனுப்பினார். அதைக் கேட்டு அடுத்த சில ஓவர்களில் 2 வருடங்கள் கழித்து முதல் முறையாக புஜாரா சிக்ஸர் அடித்தது ரசிகர்களையும் ரோகித் சர்மாவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Pujara SIX Out

ஆனால் பொதுவாகவே நிதானமாக விளையாடக்கூடிய அவர் வேகமாக ரன்களை குவிக்க வேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்தில் கவனத்தை இழந்து அடுத்த சில ஓவர்களிலேயே ஸ்டீவ் ஸ்மித்தின் அபார கேட்ச்சால் அவுட்டானார். ஒருவேளை அக்சர் பட்டேல் கடைசி வரை அவுட்டாகாமல் எதிர்ப்புறம் நின்றதற்கு அவசரப்படாமல் புஜாரா பேட்டிங் செய்து இன்னும் கூடுதலான ரன்கள் எடுத்திருந்தால் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று நிறைய ரசிகர்கள் ரோகித் சர்மாவை விளாசி வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்ஸர்களை விட பொறுமையாக நின்று பெரிய ரன்களை குவிக்கும் புஜாராவின் திறமை மீது நம்பிக்கை வைக்காத ரோஹித் சர்மாவின் செயல் தமக்கு ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த நேரத்தில் உண்மையாக என்ன செய்தி அனுப்பப்பட்டது என்பது பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை மிட் ஆன் திசையில் ஃபீல்டர்கள் உள்ளே இருப்பதால் மேலே தூக்கி அடியுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கலாம்”

harbhajan

“ஆனால் அது தேவையற்றது. நீங்கள் புஜாராவை அந்த சமயத்தில் நிலவும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் விளையாட அனுமதித்திருக்க வேண்டும். ஏனெனில் களத்தில் இருக்கும் அவரை விட யாராலும் சூழ்நிலையை புரிந்து கொண்டிருக்க முடியாது. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அவரால் எளிதாக மேலே தூக்கி அடிக்க முடியும் என்பது போல் தோன்றும். ஆனால் அது மிகவும் கடினமானது. இருப்பினும் வெளியிலிருந்து இதை செய்யுங்கள் என்று செய்தி வந்தால் அணிக்காக அதை புஜாரா செய்யக்கூடியவர்”

இதையும் படிங்க:RSA vs WI : சத்தமின்றி இரண்டரை நாளில் முடிந்த டெஸ்ட், அதிரடியாக வென்றும் வரலாற்றில் மோசமான படைத்த தெ.ஆ கேப்டன் பவுமா

“அங்கே ரன்கள் தேவைப்பட்டதால் அவரும் அதை செய்தார். என்னைப் பொறுத்த வரை புஜாரா சிக்சர்களை விட பெரிய ரன்களை குவிக்கும் திறமை கொண்டவர். அது போன்ற ஒரு சூழ்நிலையில் தேவைப்பட்டால் மற்றவர்களை விட அவரால் சிறப்பாக செயல்பட முடியும். ஏனெனில் சிறந்த டெஸ்ட் வீரரால் சிறந்த டி20 வீரராக செயல்பட முடியும். ஆனால் ஒரு சிறந்த டி20 வீரரால் எப்போதும் சிறந்த டெஸ்ட் வீரராக உருவாக முடியாது. எனவே புஜாரா அந்த சிக்சர் அடித்தது எனக்கு ஆச்சரியமில்லை” என்று கூறினார்.

Advertisement