எங்களுக்குள்ள போட்டி பொறாமை இருக்கு தான்.. ஆனா அவர் இல்லாம நான் இல்ல.. அஸ்வின் நெகிழ்ச்சி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு அடுத்ததாக 2025 உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கள் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வரலாற்றில் இதுவரை இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

எனவே இம்முறை டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அத்தொடரில் இந்தியா வெற்றி காண்பதற்காக போராட உள்ளது. அந்த தொடரில் நட்சத்திர சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்படுவது இந்தியாவின் வெற்றிக்கு அவசியமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

போட்டியும் நெகிழ்ச்சியும்:
இந்நிலையில் பேட்டிங்கில் ஜடேஜா அளவுக்கு தம்மால் அசத்த முடிவதில்லை என்ற பொறாமை இருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவது யார் என்ற போட்டி ஜடேஜா மற்றும் தமக்கிடையே உள்ளதாகவும்என்று அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் அப்படி போட்டியிருந்தாலும் ஜடேஜா இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் ஜடேஜா இல்லை என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு.

“ஒரு நபர் மீது நான் எப்போதும் பொறாமையுடன் இருப்பேன். அது தற்சமயத்தில் மகத்தான கிரிக்கெட்டராகவும் அதிக விலைக்கு செல்பவராகவும் அதிகமாக ஈர்க்கப்படுபவராகவும் இருக்கும் விராட் கோலி ஆவார் ஆனால் அவரை விட பொறாமைப்படும் ஒரு கிரிக்கெட்டர் என்றால் அது ரவீந்திர ஜடேஜா ஆவார். ஜடேஜா மற்றும் என்னுடைய பயணம் முற்றிலும் வித்தியாசமானது”

- Advertisement -

“ரவீந்திர ஜடேஜா ஒரு நாளில் தொடர்ந்து ஒரே இடத்தில் சிறப்பாக பந்து வீசுவார். அதே போல ஃபீல்டிங் செய்யும் போது அபாரமாக செயல்படுவார். பேட்டிங்கில் மிகவும் எளிமையாக விளையாடுவார். அந்த வகையில் பெரும்பாலான நாட்களில் அவர் வெளிப்படுத்தும் மில்லியன் டாலர்களுக்கு நிகரான செயல்பாடுகளை நான் வெளிப்படுத்துவதில்லை. சில காரணங்களுக்காக இதை நான் நீண்ட நாட்களாக சொல்லாமல் இருந்தேன்”

இதையும் படிங்க: எதுக்கும் அதுல செக் பண்ணிட்டு 2024 டி20 உ.கோ சான்ஸ் கொடுக்கலாம்.. விராட் – ரோஹித் பற்றி பீட்டர்சன் கருத்து

“ஆனால் இதை அவரிடம் சொல்வதற்கான வழி எனக்கு கிடைத்தது. அதனால் எங்களுக்குள் யார் சிறந்தவர் என்ற போட்டியும் இருந்தது. ஆனால் உண்மை என்னவெனில் எங்களால் ஒருவர் இன்றி மற்றொருவர் இருக்க முடியாது. ஜடேஜா இல்லாமல் அஸ்வின் இல்லை. அஸ்வின் இல்லாமல் ஜடேஜா இல்லை. நான் ஆர்வமாக இல்லாவிட்டால் அதிகமாக யோசிக்காவிட்டால் நான் எப்படி செய்கிறேனோ அதே இடத்தில் பந்தை வைக்கவோ அல்லது பேட்டிங் செய்யவோ முடியாது. தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால் அவரால் அசத்த முடியாது.
எனவே நாங்கள் ஒரே மாதிரியான வர்த்தகத்தில் ஈடுபட்டு தங்கள் சொந்த வழிகளில் வெற்றியைக் கண்டறிவதற்கான ஒரு உன்னதமான நிகழ்வு இது” என்று கூறினார்.

Advertisement