ஓய்வை அறிவிக்கப்போகிறாரா ரவீந்திர ஜடேஜா? 10 முடிந்ததும் செய்த செயலால் ஏற்பட்ட சந்தேகம் – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறப்போவதாக ஒரு தகவல் தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.

ஓய்வை அறிவிக்கப்போகிறாரா ரவீந்திர ஜடேஜா :

ஏனெனில் தற்போது 36 வயதை எட்டியுள்ள ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றியவுடன் டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவர் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும் களமிறங்கி விளையாடினார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசிய அவர் 10 ஓவர்களை வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா நேராக விராட் கோலி அருகே சென்று அவரை நீண்ட நேரம் கட்டி அணைத்தார்.

இப்படி விராட் கோலி ரவீந்திர ஜடேஜாவை கட்டி அணைத்ததால் தான் அவர் ஓய்வுபெற போகிறார் என்கிற சந்தேகமே எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறும்போது விராட் கோலி அவரை வாழ்த்தி கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதேபோன்று ஸ்டீவ் ஸ்மித் தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்னரும் விராட் கோலி அதேபோன்று அவரை கட்டியணைத்து வாழ்த்தியிருந்தார். இந்நிலையில் தற்போது ஜடேஜாவையும் அவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதால் அவரும் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : பிட்ச் அவ்ளோ கஷ்டமா இல்ல.. இதை செஞ்சா போதும் இந்தியா ஜெயிக்கும்.. தனது திட்டம் பற்றி வருண் பேட்டி

ரவீந்திர ஜடேஜா இதுவரை இந்திய அணிக்காக 204 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 231 விக்கெட்டுகளையும், 2797 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 36 வயதாகும் அவர் அடுத்த உலக கோப்பை வரை விளையாட முடியாது என்பதால் அவருக்கு மாற்று வீரராக அக்சர் பட்டேல் இனி தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement