அரைசதம் அடிக்கும்போதே இப்படி ஒரு சாதனையா? தெறிக்கவிட்ட ஜடேஜா – 4 இந்திய வீரராக அசத்தல் சாதனை

Jadeja Fifty
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸ்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 176 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் என 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அனுபவ வீரரான அவரது ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

4 ஆவது இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா அசத்தல் சாதனை :

போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஐந்தாவது வீரராக களமிறங்கிய அவர் துருவ் ஜுரேலுடன் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு இவர்களது ஜோடி 206 ரன்கள் குவித்து அசத்தியிருந்தது. அதோடு தற்போது வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து விளையாடி வரும் ஜடேஜா இரண்டாம் நாளான இன்று ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

அதனால் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் நிச்சயம் அவர் 150 ரன்கள் வரை செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது அரைசதம் கடந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இந்திய வீரராக மாபெரும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாகவே அவர் 5 சிக்ஸர்களை விளாசியிருந்தாலும் அதில் நான்கு சிக்ஸர்களை தான் அரைசதம் கடப்பதற்கு முன்னதாகவே அடித்திருந்தார்.

- Advertisement -

இப்படி டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் கடக்கும் முன்னதாக நான்கு சிக்ஸர்களை அடித்த வீரர்களாக இதற்கு முன்னர் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, நட்சத்திர விக்கெட் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே இந்த தனித்துவமான பட்டியலில் இடம் பிடித்திருந்தனர்.

இதையும் படிங்க : தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இந்திய ஏ அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா – எமோஷனலான அக்கா

இவ்வேளையில் இந்த பட்டியலில் தற்போது நான்காவது வீரராக ரவீந்திர ஜடேஜா இணைந்துள்ளார். இந்த போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 6-ஆவது சதத்தை பதிவு செய்த அவர் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது சதமாகவும் இதனை பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement