- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 முறை சதம் 4 விக்கெட்ஸ்.. ராகுல் ட்ராவிட், அஸ்வின், சோபர்ஸ் 2 சாதனைகளை.. சமன் செய்த ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்து நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய இந்தியா 448/5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, துருவ் ஜுரேல் 125, ரவீந்திர ஜடேஜா 104* ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 146 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

ஆட்டநாயகன் ஜடேஜா:

அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 38 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 1 – 0* (2) என்ற கணக்கில் இந்தியா இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 104 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 11 முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட் சாதனையை ஜடேஜா சமன் செய்துள்ளார்: அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 14
2. ராகுல் டிராவிட்/ரவீந்திர ஜடேஜா: தலா 11

- Advertisement -

2 சாதனை சமன்:

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தப் போட்டியையும் சேர்த்து ஜடேஜா 4 முறை ஒரே போட்டியில் சதத்தையும் 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக முறை ஒரே போட்டியில் சதத்தையும் 4 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. இயன் போத்தம்: 5
2. ரவீந்திர ஜடேஜா/ரவிச்சந்திரன் அஸ்வின்/கேரி சோபர்ஸ்: தலா 4

இதையும் படிங்க: இந்திய அணியில் புதுசா கொடுத்த 2 பொறுப்பை காப்பாத்த உழைக்கிறேன்.. ஆட்டநாயகன் ஜடேஜா பேட்டி

இது போக டெஸ்ட் கிரிக்கெட் 3வது அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையும் ஜடேஜா உடைத்தார். இதற்கு முன் தோனி 78 சிக்ஸர்கள் அடித்திருந்த நிலையில் தற்போது ஜடேஜா 79 சிக்ஸர்களை பறக்க விட்டு புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தத்தில் ஜடேஜா தம்மை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -